Editorial / 2026 மார்ச் 06 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த தொடர்ச்சியான மழை காரணமாக இந்நோய் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
களத்தில் இறங்கிய சுகாதாரப் பிரிவினர்
நிலைமையைக் கட்டுப்படுத்த மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ. உதயகுமார் தலைமையில் வியாழக்கிழமை (5) விசேட சோதனையிடல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதில் பொது சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸார், மாநகரசபை ஊழியர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் எனப் பல தரப்பினர் ஒன்றிணைந்து வீடுகளைச் சோதனையிட்டனர்.
சுகாதார வைத்திய அதிகாரியின் முக்கிய அறிவுறுத்தல்கள்:
வைத்தியர் உதயகுமார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் பின்வருவனவற்றை வலியுறுத்தினார்:
"நோய் பரவும் இடங்களை அழிப்பதன் மூலமே இதைக் கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் தங்கள் வீடுகள், வளவுகள் மற்றும் நீண்டகாலமாகப் பூட்டியிருக்கும் வீடுகளின் உரிமையாளர்கள் உடனடியாகத் துப்புரவுப் பணிகளை முன்னெடுத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்."
பொதுமக்களுக்கான வேண்டுகோள்:
20 minute ago
46 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
46 minute ago
2 hours ago