R.Tharaniya / 2025 ஜூன் 23 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு நகரில் பாடு மீன் வீதியில வீடு ஒன்றின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேடி எச் ரக வேன் ஒன்று திங்கட்கிழமை (23) அன்று அதிகாலை தீப்பற்றி எரிந்ததை அடுத்து தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர் இதன் போது வேன் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு கொட்டாஞ்சேனையில் இருந்து மட்டக்களப்பில் உள்ள உறவினர் வீட்டிற்கு குறித்த வானில் ஞாயிற்றுக்கிழமை (22) அன்று இரவு வந்தடைந்து வேனை வீட்டின் முன் நிறுத்தி விட்டு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் வேன் அதிகாலை 1.30 மணியளவில் தீப்பற்றியதை கண்டு உடன் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த போதும் வேன் முற்றாக தீப்பற்றி எரிந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கனகராசா சரவணன்
14 minute ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
6 hours ago
8 hours ago