R.Tharaniya / 2025 நவம்பர் 09 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் வெள்ளிக்கிழமை (07) அன்று இரவு முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 3 இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு கல்முனை வீதியில் மட்டக்களப்பு பகுதியிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த 3 பேரும் முதலில் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.


வ.சக்தி
8 hours ago
17 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 Nov 2025