Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 13 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு ஊறணி பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரையும் ஐஸ் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் உட்பட 3 பேரை சனிக்கிழமை (12) அன்று இரவு 11 மணியளவில் கைது செய்துள்ளதுடன் 26 லீற்றர் கோடா மற்றும் பெருமளவிலான ஐஸ் போதைப் பொருட்களை மீட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜ.பி பண்டார தெரிவித்தார்
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து சம்பவ தினமான சனிக்கிழமை (12) அன்று இரவு 11 மணி அளவில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ மற்றும் போதை மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி பெர்னான்டே தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரு குழுவாக பிரிந்து ஊறணிப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றுகையிட்டு அங்கு கசிப்பு உற்பத்தில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் 26 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி செய்யும் உபகரணங்களை மீட்டனர்.
இதேவேளை புதிய எல்லை வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸார் வியாபாரத்துக்காக கொண்டு வந்த இரு போதை பொருள் வியாபாரிகளை சுற்றிவளைத்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 8730 மில்லிக்கிராம், மற்றும் 7000 மில்லிகிராம் ஐஸ் போதை பொருட்களை மீட்டனர்
இதில் கைது செய்யப்பட்ட போதை பொருள் வியாபரிகளான இருவரையும்; மூன்று நாட்கள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற அமுதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago