Ilango Bharathy / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன், வ.சக்தி
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியமும், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த ”மனித உரிமையும், ஊடக சுதந்திரமும்” எனும் தொனிப் பொருளிலான விழிப்புணர்பு நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள் மற்றும் கொழும்பிலிருந்து வருகை தந்த தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின் போது இணைய வழி ஊடகவியலாளர்கள் தற்காலத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும், ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரட்சினைகளும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும்இணைய தொழில்சார் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் பெடி கமகே எடுத்துரைத்தார்.
அத்துடன் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியும் மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .