Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூலை 30 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனித விற்பனையானது நாடுகளுக்கிடைப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற நபர்களினாலும் இது முன்னெடுக்கப்படுகிறது இந்த பிரச்சினையை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கினை இலங்கையில் காண்கிறோம் என நியூசிலாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரதி உயர்ஸ்தானிகர் கம் ரியலா ஐசாக் தெரிவித்துள்ளார்.
மனித விற்பனைக்கு எதிரான செயற்குழு அமைக்கப்பட்டு இலங்கை சர்வதேச சமவாயங்களுடைய கொள்கைகளையும் உள்வாங்கி நடைமுறைப்படுத்தி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
மனித கடத்தல் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் சுரண்டலை முடிவுக்கு கொண்டு வருவோம் எனும் தொனிப் பொருளில் உலக மனித விற்பனைக்கு எதிரான தின நிகழ்வு மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்றது.
இடம்பெயர்வு கொள்கை மேம்பாட்டுக்கான சர்வதேச மையத்தில் (ICMPD) புலம்பெயர் தகவல் மையத்தில் ( (MIC) ) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - “மனித விற்பனையை நாங்கள் தடுத்து நிறுத்த வேண்டும் இந்த பிரச்சினை மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்த ஒன்று. நாங்கள் ஒன்றினைந்து மனித விற்பனையில் ஈடுபடக்கூடிய மனிதர்களையும் பாதிக்கப்பட கூடிய மனிதர்களையும் காப்பாற்றி வழி அமைத்துக் கொடுத்து அவர்களை மீள சமூகத்தில் ஒன்றிணைக்கின்ற முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.
மனித விற்பனையானது நாடுகளுக்கிடைப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற நபர்களினால் இது முன்னெடுக்கப்படுகிறது. மனித விற்பனையை நிறுத்துவதில் இலங்கை அரசாங்கம் மிக முக்கியமான முயற்சிகளை எடுத்து செயற்பட்டு வருகிறது.
இலங்கையின் சட்டவாக்கம், சட்ட அமுலாக்கம் ஏனைய நிறுவனங்களின் கட்டமைப்பு ளோடு ஏற்படுத்தக்கூடிய இடைத் தொடர்பு களையெல்லாம் அவர்கள் நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். எங்களுக்கிடையில் இணைந்த கூட்டு செயற்பாடுகளின் மூலம் இந்த பிரச்சினையை எமது பிரதேசத்தில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கினை இந்த நாட்டில் காண்கிறோம்.
மனித விற்பனைக்கு எதிரான செயற்குழு அமைக்கப்பட்டு இந்த நாடு சர்வதேச சமவாயங்கள் உடைய கொள்கைகளையும் உள்வாங்கி நடைமுறைப்படுத்தி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
நியூசிலாந்து அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் இந்த பிரதேசத்தில் மனித விற்பனையை இல்லாதொழிப்பது தொடர்பான நிகழ்சித் திட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலம் நாங்கள் பிராந்திய ரீதியான கூட்டு ஒற்றுமையையும் நடைமுறை ரீதியான தீர்வுகளையும் முன்னின்று வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படுகின்ற அதேவேளை அவர்களும் மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் மீள மறுசீரமைத்து இந்த சமூகத்துடன் இணைக்கின்ற முயற்சிகளும் இருக்கின்றது.
இந்த விடயம் நாங்கள் தனியாக ஒரிருவர் மாற்றம் செய்கின்ற கடமை இல்லை. பொலிசுக்கோ ஏனைய முப்படைத் தலைமைகளுக்கோ பொறுப்பான விடயங்கள் மட்டுமல்ல. நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து சமூக கட்டமைப்புகள் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற ரீதியில் நாங்கள் இணைந்து இதற்கு எதிராக செயற்பட வேண்டும்.
இதன் மூலம் மக்களுக்கு நல்ல எதிர்பார்ப்பையும் அவர்களுடைய உளத் தாக்கங்களிலிருந்து விடுபடுகின்ற நிலைமையையும் அவர்களை மீள குடும்பங்களோடு இணைக்கின்ற வாழ்வு வழிமுறைகளையும் நாங்கள் உருவாக்க வேண்டும்.
நாங்கள் அனைவரும் மிக உள விருப்பத்துடன் ஈடுபடுகிற போது இந்த மட்டக்களப்பிலிருந்து நாட்டிலிருந்தும் மனித விற்பனையை நீக்கலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
மறைமுகமாக இருந்து கொண்டிருக்கும் இந்த குற்றச்செயல் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வெளிக் கொண்டு வருவதன் மூலம் மனித விற்பனைக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்” என்றார்.
பேரின்பராஜா சபேஷ்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .