Editorial / 2025 நவம்பர் 02 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட, காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி வெள்ளநீரில் மதரஸா மாணவர்களை ஏற்றி வந்த உழவு இயந்திரம் தடம் புரண்டதில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மரணித்தவர்கள் சார்பாக முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகள் சம்மாந்துறை நீதிமன்றில் முன்னிலையாகி அரச அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித் குமார் முன்னிலையில் வழக்கு கடந்த 31.10.2025 ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தது.
இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணிகளான சப்றாஸ் சரீப் மற்றும் எம்.வை. அன்வர் சியாத் ஆகியோர் முன்னிலையாகினர்.
குறித்த வழக்கில் பொலிஸ் மா அதிபர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில் சாட்சிகளின் வாக்கு மூலங்களில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள், இவ்வழக்கில் அரசு அதிகாரிகள் எவ்வாறு அசமந்தமாக செற்பட்டிருந்தனர் என்பதையும் நீதிமன்றுக்கு விளக்கினர்.
குறித்த சமர்ப்பணங்களை ஏற்றுக்கொண்ட மன்று இவ்வனர்த்த சம்பவத்தில் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் ஆக குறைந்தபட்ச கவனத்தையாவது எடுத்திருக்க வேண்டும் என்று விளம்பிருந்ததோடு, இச்சம்பவம் தொடர்பில் முழுமையான புலன் விசாரணை அறிக்கையை ஆராய்ந்து தோதான கட்டளை ஒன்றை அடுத்த தினத்தில் (28.11.2025) பிறப்பிப்பதாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. வழக்கும் அன்றைய தினத்திற்கு (28.11.2025) ஒத்திவைக்கப்பட்டது.
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025