2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

Janu   / 2023 ஓகஸ்ட் 22 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை ரொட்டரிக் கழகத்தின்  2023/2024 ஆண்டிற்கான  தலைவர்  ரொட்டேரியன் ஏஎல்ஏ. நாசர் தலைமையில் கல்முனை கல்வி மாவட்ட பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாசக்கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இவையாவும் அவுஸ்திரேலியா கன்பேரா வெஸ்டர்ன் கிறிக் ரொட்டரிக்கழகம் பிரதிநிதி ரொட்டேரியன் த.ரவீந்திரன் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக  திங்கட்கிழமை (21) மூன்று  பாடசாலைகளுக்கு, திராய்க்கேணி அ.தி.மு.க.க பாடசாலை, கோளாவில் விநாயகர் வித்தியாலயம்,மற்றும்  மாணிக்கமடு அதக பாடசாலை ஆகியவற்றிற்கு 155,000/ பெறுமதியான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன.

வி.ரி. சகாதேவராஜா

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X