Janu / 2023 நவம்பர் 28 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்த ஒருவரை பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் திங்கட்கிழமை(27) மாலை 43 வயதுடைய போதைப்பொருள் வியாபாரி சந்தேகத்திற்கிடமாக நடமாடுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த போதைப்பொருளை விநியோகித்துள்ளதுடன் அவரிடமிருந்து ஒரு தொகை ஐஸ் போதைப் பொருளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கைதானவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
31 minute ago
32 minute ago