2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

`மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அடைகிறோம்`

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன்

நியுஸிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற  பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில்  மிகுந்த அதிர்ச்சியும்  கடுமையான மனவேதனையும் அடைவதாக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும்   இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து அறிக்கையொன்றை நேற்று (05) வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ”கடந்த  3 ஆம் திகதி  நியுஸிலாந்தின் ஒக்லாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லைன் கவுண்டொளன் பேரங்காடியின் உள்ளே சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ எஸ் ஐ எஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும்  கடுமையான மனவேதனையும் அடைகிறோம்.

வெறுக்கத்தக்க மிலேச்சத்தனமான இப்பயங்கரவாதச் செயலை குறிப்பாக காத்தான்குடி மக்கள் சார்பாகவும் இலங்கை முஸ்லிம் சமுகம் சார்பிலும் எமது சம்மேளனமும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் காத்தான்குடி கிளையும் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்பமாக  அறிக்கை வெளியிட்ட நியுசிலாந்து பிரதமர் அதிமேதகு ஜெசிந்தா ஆர்டேர்ன் அவர்கள் கூறிய நேர்மையானதும்  நடுநிலையானதுமான வார்த்தைகள் அர்த்தமிக்கவையும் மெச்சத்தக்கவையுமாகும்.  தாக்குதலைச் செய்தவர் ஒரு தனி நபர் அவர் செயலுக்கு அவர்மட்டுமே பொறுப்பாவார்.

தாக்குதல் சம்பவம் ஒரு மத நம்பிக்கையயியோ குறிப்பிட்ட இனக்குழுவையோ கலாசாரத்தையோ சாராது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எமது கருத்து நிலையும் அதுசாந்த்தாகவே இருக்கிறது. நிச்சயமாக இத்தாக்குதலானது மிகப்பிழையானது அருவருப்பான செயலும் கூட.   எந்தவொரு இனமோ மதமோ கலாசாரமோ அதற்கு சார்பாகவோ பொறுப்பாகவோ இருக்கவும் முடியாது, இருக்கவும் கூடாது.

தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள்  காயமடைந்தவர்கள் அவர்களது  குடும்பங்களின் வலியை நாமும் உணர்கிறோம். மனிதம் சார்ந்த உறவு நிலையில் இன மத தேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கான எமது ஆழந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .