Editorial / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழையுடன் மினி சூறாவளி வெள்ளிக்கிழமை (24) வீசியதால் 68 வீடுகளின் கூரைகள் வீசி எறியப்பட்டு சேதமைந்து ள்ளதுடன் வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் மரங்கள் முறிந்து வீழ்ந்த துடன் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்வீடுகளில் தஞ்சமடை ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.சி.எம். சியாட் தெரிவித்தார்.
இந்த மினி சூறாவளி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து ஆரையம்பதி, காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதூர் சேத்துக்குடா உட்பட பல பிரதேசங்களில் வீடுகளின் ஓடுகள் மற்றும் சீற்றினால்; அமைக்கப்பட்ட கூரைகள் தூக்கி எறிந்தது டன் ஓடுகள் சீற்றுக்கள் உடைந்து வீழ்ந்ததுடன் தகரத்தில் அமைக்கப்பட்ட கூரைகள் வீசி ஏறியப்பட்டமையடுத்து வீடுகளில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர்.
அதேவேளை வீதிகள் மற்றும் வீடுகளில் இருந்த பாரிய மரங்கள் முடிந்து வீழ்ந்ததுடன் மின்சார கம்பிகள் அறுந்ததையடுத்து சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது டன் கரங்களால் அடைக்கப்பட்ட வேலிகள் காற்றினால் தூக்கி வீசப்பட்துடன் மதில்கள் சில உடைந்து சேதம் ஏற்பட்டது
இதையடுத்து இந்த அனர்தத்தினால் வீடுகள் பாதிக்கப்பட்டவர்கள் உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
8 minute ago
24 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
24 minute ago
54 minute ago