2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மீனின் அலகு குத்தியதில் மீனவர் மரணம்

Janu   / 2025 ஜூன் 30 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (29) இரவு மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 24 ஆம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க, மூன்று பேருடன் சென்ற மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மீன் பிடித்துக் கொண்டிருந்த போது வலையில் சிக்கிய கொப்புறு மீனை இயந்திர படகில் ஏறுவதற்கு முயற்சித்த போது மீனின் அலகு வயிற்றுப் பகுதியில் குத்தி அவர் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்த நபரை ஏனைய மீனவர்கள் கரைக்கு கொண்டு வரும் போது உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் பிறைந்துறைச்சேனை பகுதியை பிறப்பிடமாகவும், பாலைநகர் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட 47 வயதுடைய மீரா லெப்பை சஹாப்தீன் என்பவராவார்.

மரணமடைந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 எச்.எம்.எம்.பர்ஸான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .