Editorial / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ். றிபாஸ்
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷன் ஏற்பாட்டில் நடைபெற்ற முப்பெரும் விழாவும், கௌரவிப்பும் சவளக்கடை றோயல் காடன் கடந்த திங்கட்கிழமை(20) நடைபெற்றது.
பவுண்டேசனின் பணிப்பாளர் சட்டத்தரணி சீ.எம்.ஹலீம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹ்துல் நஜீம் பிரதம அதிதியாகவும், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.எச்.எம்.ஜாபீர், பீ.எம்.வை.அரபாத் முகைதீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சீ.எம்.முபீத்
ஆகியோர் கௌரவ அதிதியாகவும், ஏனைய பாடசாலைகள் அதிபர்கள், கல்வியலாளர்கள் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
நற்பிட்டிமுனை பிரதேசத்தில் கடந்த காலங்களில் சுமார் 168 ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள் உட்பட பரீட்சைகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள், இணைப்பாட விதான செயற்பாடுகளில் திறமை காட்டிய மாணவர்கள் என பலர் இவ்வமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.




2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago