2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

முருகன் ஆலயத்தில் பணப்பையை திருடிய பெண் கைது

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 01 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில்  பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபாய் பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (31) அன்று இரவு  கைது செய்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.

வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவம் இடம்பெற்று வருகின்ற நிலையில் அங்கு ஆலயத் தரிசனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் கைப்பை திருட்டு போயுள்ளது .

இதையடுத்து அங்கு காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்ததையடுத்து பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் த.றஜிக்காந்தன் தலைமையில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் 10683 சசினி, 61627 அனுஷ்க்க மேற்கொண்ட விசாரணையில் பணப்பையை திருடிய பெண் ஒருவரை ஆலய பகுதியில் வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர்.

இதன் போது திருட்டுப்போன கைப்பையும் அதில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டதுடன் திருட்டில் ஈடுபட்ட பெண்ணிடம் இருந்து மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக  விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

கனகராசா சரவணன்,ரீ.எல் ஜவ்பர்கான்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .