2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் பலி

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ம் கட்டை சந்தியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்து புதன்கிழமை (08) அன்று மாலை இடம் பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூதூரை சேர்ந்த (வயது 55) குடும்பஸ்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக தெரியவருவது பொது போக்குவரத்து பஸ்ஸில்  இருந்து இறங்கி மஞ்சள் கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 ஏ.எச்.ஹஸ்பர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .