2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மோட்டார் சைக்கிளுடன் எரிபொருள் கொள்கலன் மோதி விபத்து

R.Tharaniya   / 2025 ஜூன் 25 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு புகையிரதசந்தி வீதியின் சமிக்ஞைக்காக (Road Signal) காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன், எரிபொருள் கொள்கலன் ஒன்று மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு 40 ஆயிரம் எரிபொருளுடன் வந்த பவுசரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்து பொலிஸார் எரிபொருள் பவுசரை அவ்விடத்தில் இருந்து அகற்றினர். விபத்துச் சம்பவம் குறித்து போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரின்பராஜா சபேஷ்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .