2025 நவம்பர் 18, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

Janu   / 2025 செப்டெம்பர் 07 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கிரான் குளம் பிரதான வீதியில் வெள்ளிக்கிழமை(06)  மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிரான் குளம் பிரதான வீதி தெற்கு பகுதியைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியூடாக ஒரே திசையில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகின.   

விபத்தின் போது குறித்த நபர்  தலைக்கவசம் அணிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 எம். எஸ். எம். நூர்தீன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X