2025 நவம்பர் 19, புதன்கிழமை

ரோகிங்யா முஸ்லிம்களில் 12 பேர் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைப்பு

Editorial   / 2025 ஜனவரி 08 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கீத்

கடந்த மாதம் இலங்கைக்குள் வந்திருந்த ரோஹிங்யா  முஸ்லிம்களில் 12 நபர்கள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தனர்.கடந்த வருடம் 31ஆம் திகதி மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

எனினும், இன்று அவர்கள் மீதான குற்றச்சாட்டை சிஐடியினர் வாபஸ் பெற்ற நிலையில் அவர்களும் அந்த 12 நபர்களும் விசா இன்றி உள்ளே இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு முல்லைதீவில் வைக்கப்பட்டிருந்த 103 நபர்களுடன் இணைக்கும் நோக்கில் திருகோணமலையில் இருந்து விடுவிக்கப்பட்டு அவர்களையும் முல்லைதீவு நோக்கி பொலிஸார் அழைத்து சென்று உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X