Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஜூலை 30 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் "வாரத்தில் ஒரு நாள்" வேலைத்திட்டமொன்று புதன்கிழமை (30) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அத்திட்டத்தை வாராந்தம் செயற்படுத்தவுள்ளதாகவும் குறித்த பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
"வாரத்தில் ஒரு நாள்" வேலைத்திட்டத்தின் முதலாவது ஆரம்பப் பணியை அட்டாளைச்சேனை - 16 ஆம் பிரிவில் ஆரம்பித்து வைத்துள்ளோம். இத்திட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் வாரத்தில் ஒரு நாள் செயற்படுத்தப்படுகின்றவேளை, அப்பிரிவில் உள்ள பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு பதிலளித்தல், பொருத்தமான இடங்களுக்கும், செயற்படாமல் இருக்கின்ற மின் விளக்குகளை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், வடிகான்களை துப்பரவு செய்தல், திண்மக் கழிவுகளை முறையாக அகற்றுதல் போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.
அவ்வாறு முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள், கல்வியியலாளர்கள், உலமாக்கள், பிரதேச விளையாட்டுக் கழகங்கள், சமூக சேவை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸின் எண்ணக்கருவில் உருவான "வாரத்தில் ஒரு நாள்" என்ற இந்த வேலைத்திட்டம் அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு புதன்கிழமை (30) முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அபு அலா
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .