2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘வாரத்துக்கு ஒரு நாள்’ டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Freelancer   / 2022 நவம்பர் 21 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் டெங்கு அதிகமாகப் பரவுவதால், ‘வாரத்துக்கு ஒரு நாள்’ டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்துக்கு அமைய, பள்ளிக்குடியிருப்பு 1ம், 2ம் பிரிவுகளில், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம் ஏ றாசிக் தலைமையில் வீடுகள் மற்றும் பொது நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டன.

இதன்போது, டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் அடையாளம் காணப்பட்ட வீடுகள், காரியாலயங்கள் என்பன துப்புரவு செய்யப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்தனர். 

டெங்கு பரவலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக, ஒவ்வொரு வாரமும் எல்லா வட்டாரங்களிலும் இதே போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. எனவே, வீடுகள், பொது நிறுவனங்களை துப்புரவு செய்து வருகின்ற அதிகாரிகளுக்கு, சிரமங்களை  ஏற்படுத்தாதவாறு நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்களான ரீ.எம் ஐய்யுப், ஏ.ஜி.எம் பர்சாத், எம். சஹாப்தீன், கல்முனை பிராந்திய தொற்று நோய்ப் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ. சீ.எம் பசால், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எப். எம். ஏ காதர், அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரீ.எம்.எம் அன்சார், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், இராணுவத்தினர்,  வட்டாரங்களுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .