2025 ஜூலை 12, சனிக்கிழமை

வாழைச்சேனையில் போதைப்பொருள் வியாபாரி கைது

R.Tharaniya   / 2025 ஜூலை 10 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீண்ட காலமாக போதை பொருள்வியாபாரம் செய்து வந்த வியாபாரி வியாழக்கிழமை (10) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

மூன்று நாள் தொடர் முயற்சியினால் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் இராணுவ புலனாய்வுப்பிரிவினரின்  கூட்டு முயற்சியினாலும் அவர்களுக்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலன்னறுவையை சேர்ந்த பிரபல போதைப்பொருள் வியாபாரி ஒருவர் வியாழக்கிழமை (10) அன்று அதிகாலை புனாணை, ரிதிதென்ன பிரதேசத்தில் வைத்து போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வியாபாரி கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போதைப் பொருட்களைக் கொண்டு வந்து கல்குடாப்பிரதேசத்தில் வினியோகித்து வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 5,320 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும்100 கிராம் கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட நபரையும் சான்றுப்பொருட்களையும் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.எம்.எம்.முர்ஷித்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .