2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

வாவியை ஊடறுத்து வந்த காட்டு யானைகள்

Freelancer   / 2021 ஓகஸ்ட் 24 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை காலமும் படுவாங்கரைப் பகுதியை துவம்சம் செய்து வந்த காட்டு யானைகள் தற்போது மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து எழுவாங்கரைப் பகுதிக்கு வந்துள்ளன.

இவ்வாறு 4 காட்டு யானைகள் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து களுவாஞ்சிகுடிப் பகுதிக்கு இன்று வந்துள்ளன. 

தற்போது ஆற்றங் கரையோரமுள்ள பற்றைகளுக்குள் அந்த 4 காட்டு யானைகளும், நிற்பதனால்  அப்பகுதி மக்களும் அச்சம் கொண்டுள்ளனர்.

படுவாங்கரைப் பகுதியில் மாலை வேளைகளில் கிராமங்களுக்குள் உட்புகுந்து மக்களையும், பயிர்களையும், வீடுகளையும், அழித்து வருவது போன்று   களுவாஞ்சிகுடி ஆற்றங்கரையோரம் இவ்வாறு நிற்கும் யானைக் கூட்டம் மாலை வேளையாகியதும், நகர்ப்பகுதிக்குள் உள்வரலாம் என்ற அச்சம் மக்கள் மத்தில் உள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

இந்நிலையில் மட்டக்களப்பு வாவியை ஊடறுத்து நகர்ப் பகுதிக்கு காட்டு யானைகள் ஊடுருவியுள்ளமை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வெல்லாவெளி சுற்றுவட்டாரக் காரியாலய அதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இவ்விடயம் தொடர்பில் தாம் ஸ்த்தலத்துக்கு உடன் விரைந்து நிலமையை அவதானிக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .