2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

விபத்தில் பூசகர் மரணம்

Freelancer   / 2023 ஒக்டோபர் 26 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை-மட்டக்களப்பு பிரதான வீதி பூநகர்,  20 ஏக்கர் பகுதியில் வியாழக்கிழமை (26)  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஈச்சிலம்பற்றில் இருந்து சேறுநுவர நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று  கொண்டிருந்த போது  வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகக் கொண்ட பூநகர் சிவன்கோயிலில் பூசகராக பணி புரியும் கே.கஜரூபன் (34வயது) எனவும் தெரியவருகிறது.

உயிரிழந்த பூசகரின் சடலம் ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து  தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X