Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Nirosh / 2021 ஜனவரி 04 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், பிரதான வீதியை அண்டிய அனைத்து வியாபார நிலையங்களையும் நாளை(05) முதல் மூன்று நாள்களுக்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேசசபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில், கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருவதைத் தொடர்ந்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கருதி அவசர ஒன்றுகூடலொன்று, அப்பிரதேசசபை கேட்போர் கூடத்தில் இன்று (04) மாலை நடைபெற்றது.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் பிரதேச சபை உறுப்பினர்கள், வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வரும்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி வியாபார நிலையங்களில் பணிப்புரியும் ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு சகலரும் ஒத்துழைப்பையும் சுகாதார தரப்பினர் எதிர்பார்ப்பதாக, அப்பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார்.
ஓட்டமாவடி பொதுச் சந்தையை அண்டியுள்ள மரக்கறி வியாபாரிகள் மாத்திரம் நாளை(05) இரண்டு மணி வரை வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேரத்தின் பின்னர் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கமைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மரக்கறி வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
வியாபார நிலையங்களை திறப்பதற்கு மாத்திரம் தடை விதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நடமாடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்றும், மக்கள் சுகாதார விதிமுறையினை பின்பற்றி தங்களது பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு செயற்படுமாறும், இதற்கு வியாபார உரிமையாளர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக அங்குத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள வீதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago