Janu / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் திங்கட்கிழமை (08) அன்று இடம் பெற்றது.
டித்வா புயல் மற்றும் வெள்ளத்தால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை சரியான முறையில் கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட நபர்களுக்கான உரிய நஷ்டஈடுகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டன.
மாவட்டத்தில் விவசாய துறைசார் திணைக்களங்கள் அனர்த்த பாதிப்புகள் தொடர்பான தரவுகளை துரிதமாக சேகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் விவசாய துறைசார் திணைக்களங்கள் அனர்த்த பாதிப்புகள் தொடர்பான தரவுகளை துரிதமாக சேகரித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட விவசாய பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீர், திணைக்கள தலைவர்கள், விவசாய, கால்நடை, காணி, நீர்ப்பாசனம் ஆகிய திணைக்களங்களுக்கான மாவட்ட இணைப்பாளர் கே.திலகநாதன்,பணிப்பாளர்கள், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
எம். எஸ். எம். நூர்தீன்

3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago