Janu / 2025 செப்டெம்பர் 15 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புன்னைச்சோலை பகுதியில் வீடொன்றின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 20 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம், சுமார் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.
புன்னைச்சோலை சேமக்காலை வீதி 4ம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள குறித்த வீட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு வீட்டார் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது வீட்டின் சமையலறை பகுதி கதவை உடைத்து வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் அங்கு அறைகளில் உள்ள அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 20 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் சுமார் 33 அரை பவுன் கொண்ட தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார், தடயவியல் பிரிவு பொலிஸார் அழைக்கப்பட்டு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனகராசா சரவணன்

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .