Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 12 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க.விஜயரெத்தினம்
துறைநீலாவணையில், வீட்டு வேலைக்காக வாங்கி வைத்திருந்த சீமேந்து மூடைகள் மூன்று, இன்று(12) அதிகாலை 1.30 மணியளவில் திருடப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை – 7ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றிலேயே, இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தனது மகள் ஒருவர் மத்திய கிழக்கு நாடொன்றில் கடமைபுரியும் மாதச் சம்பளத்தில் 1,300 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்பட்ட சீமேந்து மூடைகளே, இவ்வாறு திருடர்களால் திருடப்பட்டுள்ளதாக, வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வீட்டில், மின்சார இணைப்புக்கான பிரதான ஆழியையும் மின்குமிழையும் பிடுங்கி வைத்து விட்டு, சீமேந்து மூடைகள் களவாடப்பட்டுள்ளன.
குறித்த வீட்டில் வளர்க்கும் நாய்க்கு நன்கு பரீட்சயமானவர்களே, சீமேந்கு மூடைகளை களவாடியுள்ளதாக, வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
2 hours ago
3 hours ago