R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதமுனையை பிரதான வீதியில் வியாழக்கிழமை (28) அன்று காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது,
கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று காலை 6.00 மணிக்கு பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துயில் பெரிய நீலாவணையில் இருந்து கல்முனை மாநகர சபைக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் பெரியநீலாவணை சரஸ்வதி வீதியில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான டி. பாஸ்கரன் (56) என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர், கல்முனை மாநகர சபையில் காவலாளியாக பணியாற்றி வருபவர் அவர். சம்பவ தினமான வியாழக்கிழமை (28) அன்று பெரியநீலாவணையில் அமைந்துள்ள கழிவகற்றல் நிலையத்தில் கடமையாற்றி விட்டு தனது வேலை முடிவுறுத்தல் பணிக்காக கல்முனை மாநகர சபைக்கு செல்லும் போது மருதமுனை பிரதான வீதியில் இந்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது.விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஏ.எல்.எம்.ஷினாஸ்
1 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago