Kogilavani / 2011 ஜூலை 04 , பி.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நுரைக்குமிழுக்குள் மேலும் குமிழிகளை உருவாக்குவதில் நிபுணரான சாம்ஸன் பபிள்மேன் தனது ஏழாவது கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நுரைக்குமிழிகளை உருவாக்குவதையே தமது வாழ்க்கைத் தொழிலாக தேர்ந்தெடுத்த இவர், பபிள்மனிதன் என அழைக்கப்படுகின்றார். இவரின் உண்மையான பெயர் சாம் ஹீத் என்பதாகும்.
39 வயதான சாம்ஸன் அண்மையில் ஒரு நுரைக்குமிழுக்குள் 56 நுரைகுமிழிகளை உள்ளடக்கி புதிய உலக சாதனை புரிந்துள்ளார்.
தனது சொந்த சாதனையையே இவர் முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் 2006 ஆம் ஆண்டு ஒரு நுரைக்குமிழிக்குள் 46 குமிழிகளை உருவாக்கி தனது முதல் உலக சாதனையை படைத்தார்.
அதன் பின் குமிழிகள் உருவாக்குவதில் பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.
2007 ஆம் ஆண்டு அவர் லண்டன் விஞ்ஞான நூதனசாலையில் 50 மனிதர்களை உள்ளடக்கக்கூடிய பாரிய நீர்குமிழியை உருவாக்கினார்.
இரு பிள்ளைகளின் தந்தையான அவர் சங்கிலி கோர்வை போன்ற நீளமான குமிழிகளை உருவாக்கியும் சாதனை படைத்துள்ளார். அதிக தடவை துள்ளக்கூடிய குமிழிகளையும் இவர் உருவாக்கினார்.
கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக அவர்; நுரைக்குமிழிகளை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார். அது தன்னை சிறந்த நுரைக்குமிழிகளை உருவாக்கும் கலைஞராக உருவாக்கியுள்தாக அவர் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
.jpg)
15 minute ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
7 hours ago
7 hours ago