Kogilavani / 2011 ஜூலை 08 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலகின் மிகப் பெரிய ஹம்பர்கர் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனது நிறை 777 இறாத்தால்களாகும் (352 கிலோகிராம்).
அமெரிக்காவின் அலமேடா பிராந்தியத்தில் நடைபெற்ற கண்காட்சியில் இதனை பார்ப்பதற்கு பெருந்திரளானோர் குவிந்தனர்.
இதற்கு முன்பு 590 இறாத்தல் நிறையுடைய ஹம்பர்கர் கடந்த மே மாதம் தயாரிக்கப்பட்டு கின்னஸ் உலக சாதனையாக பதியப்பட்டிருந்தது. இதனை கனடா டொரன்டோரவைச் சேர்ந்த டெட் ரீடார் என்பவர் தயாரித்திருந்தார்.
தற்போது சாதனை படைத்துள்ள புதிய பர்கரை தயாரிப்பதற்கு 15 மணித்தியாலம் சென்றுள்ளது. அதிகாலை 5 மணியளவில் தயாரிப்புப் பணிகள் ஆரம்பமாகின. இரவு 8 மணிக்கு அந்த பர்கர் உண்ணப்படுவதற்கு தயாராக இருந்தது. சமையல் நிபுணர் என்கிறிட் இதை தயாரித்தார்.
கடந்த டிசெம்பர் மாதம் தான் ஒரு மாதகாலம் விடுமுறையில் இருந்தபோது, உலகின் மிகப் பெரிய பர்கர் தயாரிக்கும் யோசனை தனக்குத் தோன்றியதாக சமையல் நிபுணர் என்கிறிட் தெரிவித்துள்ளார்.
.jpg)
3 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
9 hours ago