2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

ஒரு கி.மீ. நீளமான உலகின் மிகப்பெரிய நீச்சல் தடாகம்

Super User   / 2012 மே 21 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலி நாட்டில் சுமார் ஒரு கிலோமீற்றர் நீளமான நீச்சல் தடாகமொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு  20 ஏக்கர்களாகும். உலகின் மிகப் பெரிய நீச்சல் தடாகம் இதுவாகும்.   115 அடி ஆழம் கொண்ட இந்த நீச்சல் தடாகத்தில் படகுகளை செலுத்தவும் முடியும்.

அல் கராபோ நகரிலுள்ள அல்போன்ஸோ டெல் மார் உல்லாச விடுதியில் பசுபிக் சமுத்திர கரையோரமாக இந்த நீச்சல் தடாகம் அமைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்தப்படும் நீச்சல் தடாகங்களைவிட இது 20 மடங்கு பெரியது. 250 மில்லியன் லீற்றர் நீரை இது கொண்டுள்ளது.

உலகின் மிக ஆழமான நீச்சல் தடாகம் எனவும் கின்னஸ் சாதனை நூலில் இது பதிவுசெய்யப்பட்டுள்ளது.

2006 ஆம் ஆண்டில் சுமார் 200 கோடி அமெரிக்க டொலர் செலவில் இத்தடாகம் நிர்மாணிக்கப்பட்டது. அத்துடன் இதை பராமரிப்பதற்கு வருடாந்தம் 40 லட்சம் டொலர் செலவிடப்படுகிறது.





  Comments - 0

  • fathima asra Monday, 23 July 2012 06:55 AM

    இது ரொம்ப ஓவர்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .