Kogilavani / 2011 மே 12 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
உலகின் மிக உயர்ந்த மலைச் சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை 21 தடவையாகவும் அடைந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் 52 வயதான ஒருவர்.
நேபாளத்தை சேர்ந்த அபா சேர்பா எனும் இவர் மே 11 ஆம் திகதி புதன்கிழமை இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளதாக நோபாள உல்லாசத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
அபா சேர்பா கடந்த 1990 ஆம் ஆண்டு முதற் தடவையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்தார். மலையேற்ற ஆய்வு தொடர்பான ஆய்வொன்றை மேற்கொண்ட சர்வதேச குழுவொன்றுக்கு அப்போது அவர் உதவினார்.
2008 ஆம் ஆண்டிலிருந்து கால நிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுகிறார். அச்சிகரத்திலிருந்து கழிவுகளையும் அவர் கொண்டு வந்துள்ளார்.
மே 10 ஆம் திகதி இச் சிகரத்தில் 7,590 அடி உயரத்திலுள்ள கேம்ப் 4 எனும் இடத்தில் ஏனைய 5 பேருடன் முகாமிட்டிருந்தார். அவர்கள் அனைவரும் 10 ஆம் திகதி இரவு மீண்டும் உச்சியை நோக்கி ஏறத் தொடங்கி 11 ஆம் திகதி காலையில் சிகரத்தின் உச்சியை அடைந்ததாக ஆசிய மலையேற்ற அமைப்பான ஏசியன் ட்ரெக்கிங் தெரிவித்துள்ளது.
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026