2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

226 அடி தூரம் பறந்த கடதாசி விமானம்

Kogilavani   / 2012 மார்ச் 01 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

அமெரிக்காவைச் சேர்ந்த கால்பந்தாட்ட விளையாட்டு வீரர் ஒருவர் கடதாசியினால் செய்த விமானத்தை 226 அடி தூரம் பறக்கவிட்டு புதிய சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.

ஜோ அயூப் என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார். இவர் எய்த கடதாசி விமானமானது 226 அடி 10 அங்குல தூரத்தை கடந்துள்ளது. இவர் இதற்கு முன்பு இருந்த 20 அடி என்ற சாதனையை முறியடித்துள்ளார்.

ஜோன் கொலின் என்வரினால் வடிவமைக்கப்பட்ட மேற்படி கடதாசி விமானமானது ஏ4 பேப்பரினால் வடிவமைக்கப்பட்டு சிறிய டேப்பினால் ஒட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் அயூப் தெரிவிக்கையில், 'சிறுவயது முதலே எனக்கு இதில் ஆர்வம் அதிகம். நான் சிறியவனாக இருக்கும்போது பாடசாலையிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வழியில் கடதாசி விமானம் செய்து எறிவது வழமை.

இது எனக்கான ஒரு வழிதான். சிலர் இதில் பெரிதாக என்ன இருக்கின்றது என நினைப்பார்கள். இது சாதாரண கடதாசி விமானம்தான். ஆனால் அது உலக சாதனையை நிலைநாட்டிவிட்டது.

இந்த இலக்கை அடைவதற்காக எனது நண்பர் ஜோன் மிகவும் உதவியிருக்கிறார். இது மிகவும் சன்மானமிக்கது.  இந்த சாதனைக்காக நான் பெறுமைபடுகிறேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .