A.P.Mathan / 2012 ஜூலை 04 , பி.ப. 02:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டாயிற்று. இனி – சதுரங்க ஆட்டம் சூடு பிடிக்கும். வெட்டுக் குத்துகளும் குழி பறித்தல்களும் மின்னல் வேகத்தில் நடக்கும். தங்கள் கனவுகளையும், கதிரைகளையும் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு 'சாக்கடை'யில் இறங்கி நாட்டியமாடுவார்கள் நமது அரசியல்வாதிகள்! மகா ஜனங்களும் உள்ளுக்குள் ஒரு விருப்பத்தினை வைத்துக் கொண்டு அது நிறைவேற - வாக்குச் சீட்டுகளில் கோடு கிழிப்பார்கள். ஆயினும், வாக்காளர்களின் பெரும்பான்மை விருப்புகளுக்கு மாறாகவே சில விடயங்கள் நடந்து முடியும்!
சரியான நடைமுறையொன்று பின்பற்றப்படுமாயின், தாம் ஆட்சியமைக்கும் பட்சத்தில் முதலமைச்சர் தெரிவு எவ்வாறு இடம்பெறும் என்பதை ஒவ்வொரு பிரதான கட்சியும் மக்களுக்குத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.
இவ்வாறானதொரு நிலையில், கலைக்கப்பட்ட மூன்று மாகாண சபைகளுக்குமான ஐ.ம.சு.முன்னணியின் முதலமைச்சர் வேட்பாளர்களாக, குறித்த மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர்களையே நிறுத்தப் போவதாக ஐ.ம.சு.முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஆனால், இங்கும் ஒரு கேள்வி உள்ளது. முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுகின்றவர்களை விடவும், அந்தக் கூட்டணியின் மற்றொரு வேட்பாளர் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொள்வாராயின் - எவ்வாறு நடந்து கொள்வது? மக்களின் அதிகபட்ச விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்டவருக்கா முதலமைச்சர் பதவியினை வழங்குவது? அல்லது, முதலமைச்சர் வேட்பாளராகப் பிரகடனம் செய்யப்பட்டவருக்கே அந்தப் பதவியினை வழங்குவதா? இதுபற்றி எதுவும் கூறப்படவில்லை.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் - கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்து, அரசாங்கம் இதுவரை ஆழமான பேச்சுவார்த்தைகள் எதிலும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. இருந்தபோதும், கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் மு.காங்கிரஸ் இணைந்து போட்டியிடுவது குறித்து, ஆளுந்தரப்பினருடன் மு.கா. பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுதல் வேண்டும் என்று அந்தக் கட்சியின் உயர் மட்டத் தலைவர்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இவ்விடயம் தொடர்பில் ஆளுந்தரப்பினருடன் பேசி - முடிவொன்றைக் காணாமல், கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதற்கான மாற்று வழியொன்று குறித்து யோசிப்பதற்கு மு.கா.விலுள்ள சில முக்கிய புள்ளிகள் விரும்பவில்லை!
இவையனைத்தும் ஒருபுறமிருக்க, கிழக்குத் தேர்தலில் ஆளும் ஐ.ம.சு.முன்னணியுடன் இணைந்துதான் மு.கா. போட்டியிடும். அதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. மேலும், என்னென்ன அமைச்சுப் பதவிகள் மு.கா.வுக்கு வழங்குவது என்பது வரை அந்தப் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்டு விட்டது. மட்டுமன்றி, மு.கா. தலைவரிடம் சொல்லி விட்டுத்தான் கிழக்கு மாகாணசபையையே ஜனாதிபதி கலைத்தார் – என்றெல்லாம் ஏராளமான கதைகள் கசிந்து வருகின்றன. குறித்த பேச்சுவார்த்தையானது, மு.கா. தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நிகழ்ந்ததாக ஊடகமொன்றும் தெரிவித்துள்ளது.
மு.கா.வுடன் ஏனைய முஸ்லிம் கட்சிகளை இணைத்துக் கொண்டு கிழக்குத் தேர்தலில் குதிக்கும் பஷீரின் முயற்சியானது – கல்லில் நாருரித்தலுக்கு ஒப்பானதாகும். இந்த முயற்சி வெற்றியடைவதற்கான சாத்தியங்களை எப்படித் தேடிப்பார்த்த போதும் கண்டு கொள்ள முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளுக்கிடையில் ஒரு கூட்டணி உருவானாலும், அதனூடாக அதிகபட்ச அனுகூலங்களை தமது அணிதான் அனுபவிக்க வேண்டுமென ஒவ்வொரு கட்சியும் உள்ளுக்குள் விரும்பும். அல்லது, தம்மைப் பயன்படுத்தி - கூட்டணியிலுள்ள ஏனைய கட்சிகள் அதிக நலன்களை அனுபவித்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். இந்த மனப்பாங்கு - கடைசியில் கூட்டு முயற்சிக்கு ஆப்பு வைக்கும்!mansoorcader Thursday, 05 July 2012 04:08 AM
இப்படி எழுத மப்றூக் அவர்களால் மட்டுமே முடியும்.
Reply : 0 0
aj Thursday, 05 July 2012 09:17 AM
என்னை பொறுத்தவரை. கிழக்கு தமிழர் தாயகம். அதில் 95 % தமிழர்கள் தமிழ் தேசியத்துக்கு வாக்களித்து நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்
இலங்கை தீவில் எங்கள் பலம் தேர்தல் காலத்திலும் சரி வெளிநாட்டு தொடர்பாடல் மற்றும் ராஜதந்திரம் மற்றும் அனைத்து துறைகளிலும்
கூட்டமைப்பு பலம் மிக்க சக்தி என்பது பல முறை நிருபிக்கப்பட்டு விட்டது. இன்று கிழக்கில் கூட்டமைப்பு போட்டி போடா போவது அரசு உட்பட பலருக்கு வைற்றில் புளியை கரைகிறது. எங்களுக்கு தெரியும் எல்லா தில்லு முள்ளு அடக்கு முறை . அச்சுறுத்தல் (அது இப்போதே ஆரம்பித்து விட்டது ) பல ஆயுத பலம் மற்றும் பண பலம் எண்டு இருக்கும் அனைத்தும் இங்கு எங்களுக்கு எதிராக பயன்படுத்தபடும். அனைத்து அரச ஆமா (தமிழ் சிங்களம் முஸ்லிம் ) கட்சிகளும் எங்களுக்கு எதிராக வேலைகள் பண்ணும். ஆனால் எங்கள் மக்கள் எங்களோட இருக்கிறார்கள் என்பதை மிக தெளிவாக அவர்கள் சொல்லுவார்கள். கிழக்கிலும் நாங்கள் .அங்கு வசிப்பது நாங்கள் . எங்கள் சொந்தங்கள் தான் தான் வசிக்கிறார்கள்.
Reply : 0 0
meenavan Thursday, 05 July 2012 11:05 AM
நல்ல அலசல் ஆனால் நடப்பது என்னோவோ நாணய தாள்களின் ஊடாக முற்றாகும்.
Reply : 0 0
prahasakkavi anwer Friday, 06 July 2012 04:11 AM
thalamaikalai vida vakkalarkal viliththukkondal nallathu. onaykalum pachchonthikalum nam veedu thedivarum kalam ithu
Reply : 0 0
Mohamed Rismy Saturday, 07 July 2012 03:38 AM
முஸ்லிம்கள் ஒன்றுபட கடைசி சந்தர்ப்பம். முஸ்லிம்களுக்கு தனிநபரை விட சமூகமே முக்கியம். யா அல்லாஹ் இவர்களை ஒற்றுமைபடுத்தி இலங்கை முஸ்லிம்களை பாதுகாப்பாயாக. ஆமீன்.. ஆமீன் ..ஆமீன்
Reply : 0 0
jesmin Sunday, 08 July 2012 04:32 AM
முஸ்லிம்கள் ஒன்றுபட கட்சித்தலைவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்கள் பிழைப்பு நடத்த முஸ்லிம்கள் பிரிந்துதானே இருக்க வேண்டும்.
Reply : 0 0
jesmin Sunday, 08 July 2012 06:17 AM
இவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .