2025 மே 19, திங்கட்கிழமை

பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும்: சம்பந்தன்

A.P.Mathan   / 2013 ஜூலை 11 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

டெய்லிமிரர் பத்திரிகைக்கு அண்மையில் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரா.சம்பந்தன், டெய்லிமிரருக்கு வழங்கிய செவ்வியின் முழு தமிழாக்கம் வருமாறு...

கே: நீங்கள் தமிழ்த் தேசிய வாதத்தின் சமகால தலைவராக பார்க்கப்படுகின்றீர்கள். உங்கள் மீது மீண்டும் மீண்டும் வைக்கப்படும் குற்றச்சாட்டு, நீங்கள் இன்னும் புலிகள் ஆயுதத்தினால் கேட்டு போராடிய தனிநாடு கோரிக்கையை முன்னெடுக்கிறீர்கள் என்பதே. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: எங்களின் உண்மையான நிலைப்பாட்டை தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தமிழரசுக் கட்சி 1950ஆம் ஆண்டுகளிலே ஆரம்பித்த பழமை வாய்ந்த அரசியல் பாரம்பரியத்தை சார்ந்தவன் நான்.
எங்களுடைய அரசியல் போராட்டம் வன்முறையற்ற அகிம்சை வழி போராட்டமாகும். சத்தியாகிரகங்கள், ஒத்துழையாமை இயக்கங்கள் என்றுதான் ஈடுபட்டோமே தவிர வன்முறைகளில் ஈடுபட்டதில்லை.

இலங்கை அரசாங்கம் மிதவாத தமிழ் தலைவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை மீறியதாலும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளாலும் தோற்றுவிக்கப்பட்டதே விடுதலை புலிகள் இயக்கம். 50, 60, 70 களில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுமே அவர்கள் தோன்ற காரணமாயிற்று.

ஒன்றை உணர வேண்டும், தமிழ் மக்கள் மீது இவ்வளவு வன்முறைகள் ஏவப்பட்டபோதும் அவர்கள் ஒருநாளும் திருப்பி தாக்கவில்லை. இந்த நிலைமைதான் விடுதலை புலிகள் தோன்ற காரணம். அதனால்தான் ஆயுதங்களை கையில் எடுக்க வைத்தது. ஆனால் அவ்வப்போது அவர்களுடன் ஆட்சிக்கு வந்து ஒவ்வொரு அரசாங்கங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தியது. 

அந்த நேரத்தில் பேச்சுவார்த்தைகளின்போது துணையாக இருந்தோம். இது எங்களை புலிகளுடன் அடையாளப்படுத்தினாலும் நாங்கள் ஒருபோதும் அவர்களின் ஓர் அங்கமாக இருந்ததில்லை. யாராலும் அப்படி சொல்ல முடியாது. 

இப்போது யுத்தம் முடிவடைந்து விட்டது. புலிகளும் அழிக்கப்பட்டு விட்டார்கள். யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வையே நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கு அரசுக்கு உண்மையான இதய சுத்தியான ஈடுபாடு இல்லாததனால் அது கைகூடவில்லை.

கே:
நீங்கள் இப்படி சொன்னாலும், உங்களது உள்நோக்கம் எப்போதும் தனி நாடாகவே இருந்து வந்திருக்கின்றதாகவும் ஒன்றுபட்ட நாடு என்ற தீர்வுக்கு நீங்கள் விருப்பமற்றவர்கள் என்றும் கருதப்படுகின்றதே?

ப: நேர்மையான தீர்வொன்றை தர மறுப்பவர்கள் எப்போதும் சொல்லுகின்ற காரணம் தான் இது. இந்த நாடு பல மொழிகள் பேசும், பல இனங்களையும் பல கலாசாரங்களையும் கொண்டது. ஜனநாயகமே அதன் அடித்தளம். அரசியலமைப்பின் மூலம் சிறுபான்மையினரான தமிழரும் முஸ்லிம்களும் அவர்கள் தந்த ஜனநாயக ஆணைப்படி அரசாட்சியில் பங்குபற்ற செய்ய நீங்கள் தயாரா என்பது தான் எங்களின் கேள்வி.

கே: ஜனநாயக ஆணை என்று நீங்கள் சொல்லும்போது, இந்த நாடு சிங்கள பௌத்த மக்களை பெரும்பான்மையாக கொண்டது என்பதை மறந்து அல்லது அலட்சியப்படுத்துகிறீர்கள் எனலாமா?

ப: இந்த நாடு சிங்கள பௌத்த நாடு என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் பெரும்பான்மை ஆதிக்கத்தை சிறுபான்மையினர் மீது திணிக்கும்போது அவர்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டியவர்கள் இல்லை என்று அலட்சியப்படுத்துவதை தான் ஏற்றுக்கொள்ள முடியாது. 

நாங்கள் தனித்துவமுடைய மக்கள். நீண்ட, நெடுங்காலமாக இங்கு வாழும் குடிகள். முஸ்லிம்களும் பல நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இங்கு வாழ்கின்றனர். அவர்களுடைய கலாசாரம் தனி. அவர்களும் எங்களைப் போல் தனித்துவமானவர்கள். 

அதற்காக நாங்கள் சிங்கள பெரும்பான்மையை ஒதுக்குகின்றோம் என்றோ, அவர்களது கருத்துக்களை எடுத்துக்கொள்ள மாட்டோம் என்றோ அர்த்தமில்லை. எந்த இடத்தில் நாங்கள் பெரும்பான்மையாக அல்லது அதிக அளவில் இருக்கின்றோமோ அங்கு அரசாட்சியில் கணிசமான பங்கு தரப்பட வேண்டும். அதேநேரத்தில் பெரும்பான்மையினரோடு இணைந்து முழு நாட்டையும் கொண்டு செல்ல ஒத்துழைப்பு வழங்குவோம். முழு நாடும் பெரும்பான்மை ஜனநாயக ஆணைப்படி ஆட்சி செய்யலாம். அதேபோன்று நாங்கள் பெரும்பான்மையாக உள்ள பிரதேசங்களில் குறிப்பிட்டத்தக்க அளவில் நாங்கள் ஆட்சி அதிகாரம் பெற அரசியல் யாப்பு மூலம் அனுமதிக்கப்பட வேண்டும். 

எங்கள் நாளாந்த வேலைகளை நாங்களே பார்த்துக்கொள்ளும் உரிமை தரப்பட வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழரும் முஸ்லிம்களும் இந்த சம உரிமை பெற்ற குடி மக்களாக இருக்க முடியாது. பெரும்பான்மை அதிகாரம் சர்வாதிகாரமாகி விடும். நாங்கள் நாட்டை பிரித்து கேட்கவில்லை. எங்களது நிலைமையை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தெளிவாக சொல்லியுள்ளோம். பொருத்தமான நிலைத்து நிற்கும் நியாயமான தீர்வையே பிரிக்கப்படாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் நாங்கள் கேட்கின்றோம்.

கே: நீங்கள் 'ஒன்றுபட்ட' என்று கூறுவது விசமமான ஒன்றாக நோக்கப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்ட அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்கின்றதா?

ப: ஐக்கியம், சமஷ்டி என்பதெல்லாம் தற்போது வழக்கொழிந்து போயுள்ளது. உலகத்தின் பல நாடுகளில் அதிகார பகிர்வு என்பதே வேறேந்த பெயரிலும் இல்லாமல் இருக்கின்றது.

இது அரசியல்யாப்பின் மூலம் சகல மக்களும் இணைந்து சம அந்தஸ்தோடு வாழ்வது என்பதே. ஐக்கியம் என்பது பல அர்த்தங்களை தரக்கூடியது. நாங்கள் கேட்பத

You May Also Like

  Comments - 0

  • AMBI. Thursday, 11 July 2013 09:50 AM

    ஐயா... உண்மையில் நிதானமான முறையில் தரமான கருத்துக்கள்... இப்படி முஸ்லிம் மக்களுக்கு குரல் கொடுக்க நமது முகா வுக்கு முடியுமா????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X