2025 மே 19, திங்கட்கிழமை

முகமாலை கண்ணி வெடியும் மாவட்ட அமைச்சர் கண்ணி வெடியும்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 28 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஐயூப்

மூன்று மாகாண சபைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி தேர்தல்கள் நடைபெற்று இரண்டு நாட்களில் முகமாலையில் வெடித்த நிலக் கண்ணி வெடியும் தேர்தல் முடிவடைந்து ஐந்து நாட்களில் காணியானது மத்திய அரசாங்கத்திகுரிய பொறுப்பு என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அரசாங்கம் மாவட்ட அமைச்சர்களை நியமிக்கப் போவதாக தேர்தலுக்கு மறுநாள் வெளியான செய்தியும் வடமாகாண சபையின் எதிர்க்காலத்தை கோடிட்டுக் காட்டுவதைப் போலாக அமைந்திருக்கின்றன.

முகமாலை கண்ணி வெடி வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராகப் போகும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு அவரது முன்னுரிமை பட்டியலை மீளாய்வு செய்வதற்காக விடுத்த அழைப்பைப் போன்றதாகும். அதேவேளை நீதிமன்றத் தீர்ப்பும் மாகாண அமைச்சர் நியமனத்திற்கான முயற்சியும் அவர் எவ்வளவு பெரும் சவால்களை எதிர்நோக்கப் போகிறார் என்பதை முன் கூட்டியே அறிவித்தலைப் போலாகும்.

நடைபெற்ற மூன்று மாகாண சபைத் தேர்தல்களில் வட மாகாண சபைக்கான தேர்தல் மட்டுமே சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. ஐ.நா. சபையும் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, பிரிட்டன் போன்ற பல பிரதான நாடுகளும் வட மாகாண சபைத் தேர்தலைப் பற்றி வெளியிட்டு இருந்த அறிக்கைகள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. அது ஒருவகையில் வரப் போகும் சவால்களுக்கு மத்தியில் வட மாகாண புதிய முதலமைச்சருக்கு ஆறுதலாகவும் அமைந்திருக்கலாம்.

தேர்தல் முடிவுகள் தத்தமது கொள்கைகளை நிறைவேற்ற மக்கள் அளித்த ஆணை என்றே அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூறுகின்றன. ஆனால் மக்கள் கொள்கைகளுக்காக மட்டும் வாக்களிப்பதில்லை என்பதே எமது வாதமாகும். இது கொள்கைகளுக்காக அளிக்கப்பட்ட வாக்காக இருந்தால் தாம் தனித் தமிழ் நாட்டைக் கோரவில்லை, ஐக்கிய இலங்கைக்குள் கூடுதல் அதிகாரத்தையே கோருகிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியதையும் மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது. அதாவது வட மாகாண மக்கள் இந்தத் தேர்தல் மூலம் வட்டுக்கோட்டை தீர்மானத்தையும் நிராகரித்துள்ளார்கள் என்றும் சிலர் வாதிடலாம்.

அதேவேளை மக்கள் கொள்கைகளுக்காக வாக்களித்துள்ளார்கள் என்றால் கண்டி மாவட்ட முஸ்லிம்கள் வழங்கிய தீர்ப்பை அரசாங்கமும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அம் மக்களை தம் பக்கம் தள்ளியதற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கும் பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கும் நன்றி செலுத்த வேண்டும். அங்கும் முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதாக கூற முடியாது. அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவே வாக்களித்துள்ளனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகி போட்டியிட்டு இருந்தால் அனேகமாக அம் மக்கள் மு.கா.விற்கே வாக்களித்து இருப்பார்கள்.

முஸ்லிம் விரோத அலையொன்று நாட்டில் வீசிக் கொண்டிருக்கையிலும் சில பலம் வாய்ந்தவர்கள் அதன் பின்புலத்தில் இருப்பதாக தெரிய இருக்கையிலும் மன்னார் முஸ்லிம்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். அதையும் அரசாங்கத்தின் கொள்கைகளை ஆதரித்து அளிக்கப்பட்ட வாக்காக ஏற்றுக் கொள்ள முடியாது. அங்கு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் ஒரு மத குருவுக்கும் இடையிலான பனிப்போரின் விளைவாகவே அதை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

மக்கள் எவரை வெல்லச் செய்ய வேண்டும் என்பதை விட எவரை தோல்வியுறச் செய்ய வேண்டும் என்பதை யோசித்தே தேர்தல்களில் வாக்களிக்கிறார்கள் என சில காலங்களுக்கு முன்னர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பீட்டர் கேனமன் ஒரு முறை கூறியிருந்ததை இது நினைவூட்டுகிறது. இது மறுப்புவாக்கு (negative vote)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X