2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கரிமலையூற்று பள்ளிவாயலின் கண்ணீர்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 20 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கரிமலையூற்று. திருகோணமலை கொட்டியாரக்குடாவில் உள்ள கரையோரக் கிராமமாகும். இரண்டாம் உலகப்போர் காலந்தொட்டே இந்த கிராமம், போர் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றது. பிரிட்டிஷார் அமைத்த சுடுமுனை அரண்கள் இன்னமும் அங்கு இருக்கின்றன.

இயற்கைத் துறைமுகம், போர்க்கப்பல்களை மறைத்து வைக்கக் கூடிய வசதி எல்லாம் இங்கிருப்பதால் இந்த இடம் இலங்கைக்கு மட்டுமல்ல சர்வதேச நாடுகளின் கண்களை ஈர்த்த, முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகத் திகழ்கின்றது.

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்னர் குடாக்கரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள திருக்கைக்குடா பிரதேசத்திலிருந்து பலர் கிண்ணியா, கந்தளாய், முள்ளிப் பொத்தானை, குடாக்கரைப் பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

திருக்கைக்குடா என்பது, திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை அண்டிய ஒரு கடற்கரைப் பிரதேசமாகும். இது ஒரு மீன்பிடிக் கிராமமாகவும், வர்த்தகத்துக்கு பெயர்பெற்ற இடமாகவும் அன்று இருந்து வந்துள்ளது. இக்கிராமத்தில் குடியிருந்த மக்களே, இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, இடம் பெயர்ந்து, நாச்சிக்குடா, வேப்பன்குடா, மகிளூற்று, வெள்ளைமணல், கரிமலையூற்று, நீரோட்டுமுனை, சின்னம்பிள்ளைச்சேனை, கிண்ணியா, முள்ளிப்பொத்தானை, கந்தளாய் பிரதேசங்களில் குடியேறினர்.

திருக்கைக்குடா பகுதியில் குடியிருப்புக்கள் இருந்தமைக்கு ஆதாரமாக இடிபாடுகளுடன் கூடிய பள்ளிவாசல்களை Clapan Burgபகுதியில் இன்றும் காணலாம்.

கரிமலையூற்று

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X