2025 மே 17, சனிக்கிழமை

உரிமைப் போர்

George   / 2015 நவம்பர் 08 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

அரிது அரிது மானிடராய் பிறப்பது அறிது என்பது ஒளவை வாக்கு... மனிதனாக பிறந்த அனைவருக்கும் இந்த பூமியில் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளும் சுதந்திரங்களும் உள்ளன. இதையே அடிப்படை மனித உரிமைகள் என்கின்றோம். இந்த உரிமைகள் - மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாகும்.

மனித உரிமைகள் என்பதனுள் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள். வாழும் உரிமை, சுதந்திரம், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், சட்டத்தின் முன் சமநிலை, நகர்வுச் சுதந்திரம், பண்பாட்டு உரிமை, உணவுக்கான உரிமை, கல்வி உரிமை என்பன முக்கியமானவை. இதில் அநாவசியமாக் கைதுசெய்யப்படுதலில் இருந்து தவிர்த்துகொள்ளுதல், சித்திரவதைக்கு உட்படா உரிமை என்பவையும் அடங்கும்.

இந்த மனித உரிமை சட்டங்கள், ஒவ்வொரு நாடுகளிலும் சில மாற்றங்களுடன் இணைக்கப்பட்டோ அல்லது குறைக்கப்பட்டோ காணப்படலாம். இருந்தாலும், உலக நாடுகள் இணைந்து உருக்கியுள்ள பொதுவான உரிமைகளும் காணப்படுகின்றன. 

மனித உரிமைகள் பற்றிய வரலாறு அண்மையில் உருவானதல்ல. ஆயினும், மனித வரலாற்றின் ஆரம்பகாலம் வரை தொன்மையானதும் அல்ல. இருந்தாலும், அது நீண்ட கால வரலாற்றை கொண்டுள்ளதை மறுக்கமுடியாது.

கிமு 539இல் பாரசீகப் பேரரசன் சைரஸ் என்பவனால் வெளியிடப்பட்ட „நோக்கப் பிரகடனம், கிமு 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான அசோகன் வெளியிட்ட „அசோகனின் ஆணை..., கிபி 622 இல் முஹமது நபியால் உருவாக்கப்பட்ட „மதீனாவின் அரசியல் சட்டம் என்பன இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 1215ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட, சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்... (ஆயபயெ ஊயசவய டுiடிநசவயவரஅ), ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது என்பதுடன், இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.

ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும் மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும் ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாற்றைக் கொண்டது. 1525ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக ஜேர்மனியில் வெளியிடப்பட்ட „கறுப்புக் காட்டின் பன்னிரெண்டு அம்சங்கள்... (வுறநடஎந யுசவiஉடநள ழக வாந டீடயஉம குழசநளவ) எனும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 
1688ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட „குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்..., 1789 ஓகஸ்ட் 26ஆம் திகதி பிரான்சின் தேசிய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட „மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கையும் இவற்றில் முக்கியமானவையாகும்.

18ஆம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்காவிலும் (1776) பிரான்சிலும் (1789) இடம்பெற்ற இரண்டு முக்கிய புரட்சிகளின் விளைவாக உருவான, „ஐக்கிய அமெரிக்க விடுதலை அறிக்கை, மனிதர்களுக்கும் குடிமக்களுக்குமான உரிமைகள் அறிக்கை ஆகிய இரண்டுமே சில சட்டம் சார்ந்த உரிமைகளை நிலைநாட்டியிருந்தன. 1776ஆம் ஆண்டின் உரிமைகளுக்கான வெர்ஜீனியா அறிக்கை...யும் பல அடிப்படை உரிமைகளைச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது.

இவற்றைத் தொடர்ந்து, 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில், மனித உரிமைகள் தொடர்பான மெய்யியல் வளர்ச்சி பெற்றதுடன் உலகப் போர்களும் அவற்றினால் விளைந்த உயிர்ச் சேதங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தற்கால மனித உரிமைகள் தொடர்பான நடவடிக்கைகள் வளர்ச்சிபெற உந்துதலாக அமைந்தன. உலகப் போர்களைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்பு நாடுகளும் இணைந்து உருவாக்கிய „மனிதாபிமானச் சட்டம், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் என்பவை தற்காலத்தில் முக்கியமானவைகளாகும்.

இது இவ்வாறு இருக்க, இலங்கையில் 3 தசாப்தகால உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்து 6 ஆண்டுகள் ஆகிவிட்டதுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரேரணை, சர்வதேச ரீதியில் பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், இலங்கை  பொலிஸார், கைதுசெய்யப்படும் சந்தேகநபர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக குற்றச்சாட்டி சித்திரவதைக்கு உட்படா உரிமை தொடர்பில் கேள்வியெழுப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட சில சட்டத்தரணிகள், பொலிஸார் மீது இந்த குற்றச்சாட்டை அண்மையில் முன்வைத்திருந்தனர்.

இவ்வாறு பொலிஸார் மீது குற்றசாட்டு எழுவதற்கான காரணம், நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய, கொட்டதெனியாவ பிரதேசத்தில் 5 வயது சிறுமியான செயா சந்தவமியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கொண்டையா என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவரின் கைதுதான்.

குறித்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் மரபணு பரிசோதனைகளில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில்தான், கொண்;டையா கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவரை பொலிஸார் கடுமையாக தாக்கி சித்திரவதைக்கு உட்படுத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை, சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்திருந்ததுடன் கொண்டையாவை ஊடகங்களுக்கு முன்னாள் கடந்த 23ஆம் திகதி கொண்டு வந்து நிறுத்தி ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் ஏற்பாடு செய்திருந்தனர்.

இலங்கையில் பாலியல் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், இலங்கை முழுவதையும் உலுக்கிய 5 வயது சிறுமியின் வன்புணர்வு கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை வைத்து, ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தமை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்பதுடன் ஊடகங்கள் வாயிலாக அவரை பிரசித்தப்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிந்தது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், தான் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட போது, குற்றப்புலனாய்வு அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும் அதன்பின்னர், ஒரு நீண்ட வாக்குமூலத்தில் கையொப்பமிட தான் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கொண்டையா தெரிவித்திருந்தார்.

'நான் கல்வி கற்காதவன். நான்தான் சிறுமியை கொலை செய்தேன் என்று நான் வாக்குமூலமளிக்கவில்லை. அந்த வாக்குமூல அறிக்கையில் என்ன எழுதியிருந்தது என்பதும் எனக்கு தெரியாது. நான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டமையினாலேயே அந்த பத்திரத்தில் கையொப்பமிட்டேன்.

நான் சிறுமி சேயாவை கண்டதும் கிடையாது. சிறுமி சேயாவை கொலை செய்த குற்றத்துக்காகத்தான் நான் கைது செய்யப்பட்டேன் என்ற விடயமே எனக்குத் தெரியாது. எனது நண்பனுடைய சில குற்றங்களுக்காக, என்மீது வழக்குகள் தொடர்கின்றன என்பதை நான் மறுக்கவில்லை. இந்த குற்றங்களுக்காக நான் கைது செய்யப்படுவேன் என்ற பயத்திலேயே, நான் பொலிஸாரிடமிருந்து தலைமறைவாகியிருந்தேன்' என்று கொண்டையா கூறியிருந்தார்.

மேலும், சிறுமி சோயாவின் கொலை தொடர்பில் தான் கைது செய்யப்படுவதற்கு முன்னர் தனக்கு கொண்டையா என்ற பெயர் இருக்கவில்லை என்றும் ஊடகங்கள் தான், தன்னை „கொண்டையா... என்று முத்திரை குத்தியது அத்துடன், ஒரு சாக்கில் எனது தலையை மூடி சீமெந்து சுவரில் முட்டி, தடியால் என்னை குற்றப்புலனாய்வு பிரிவினர் கடுமையாக தாக்கினார்கள்' என்றும் அவர் கூறியிருந்தார். இதேவேளை ஊடகங்கள், துனேஷினுடைய பெயரை முற்றாக அழித்துவிட்டதாக, உரிமைகளுக்காக சட்டதரணிகள் சங்கத்தின் சட்டதரணி உதுல் பிரேமரத்ன தெரிவித்ததுடன் 'கொண்டையா யார்? அந்த பெயரை யார் வைத்தது? ஊடகங்கள் மற்றும் மற்றைய அனைவரும்   துனேஷினுடைய இந்த விடயத்தில் நடந்து கொண்ட முறையை சிந்தித்து பார்க்கவேண்டும். இந்த விசாரணையை விரைவில் முடித்து விடும் நோக்கிலேயே, குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர்' என்று கூறியிருந்தார். 

அத்துடன், பாலியல் கொலை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திவரும் இந்த வேளையில், குறித்த சட்டத்தரணி கூறிய கருத்தும் சர்ச்சையை தோற்றுவித்தது.

'மரபணு பரிசோதனை தொழில்நுட்பம் எமது நாட்டில் இருந்திருக்காவிடில், துனேஷ் இந்த வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டிருப்பார். இவ்வாறு ஒரு பொறுப்பற்ற சட்டம் நம் நாட்டில் இருக்கையில், மரணதண்டனை நம் நாட்டில் அமுலில் உள்ளமை சிந்திக்க வேண்டிய விடயமாகின்றது. அனைத்து அப்பாவிகளும் அநியாயமாக கொலை செய்யப்படுவார்கள் எனவே, மரணதண்டனையை நாட்டில் அமுல்படுத்தவேண்டும் என்பது தொடர்பான கருத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டும்' என்றும் அவர் கோரிக்;கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பொலிஸார் மீது கூறப்பட்ட இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று பொலிஸ் தலைமையகத்தில் வியாழக்கிழமை(29) பிற்பகல் நடைபெற்றதுடன் பொலிஸார் மீதான குற்றச்சாட்டை, பொலிஸ் ஊடகபேச்சாளரும்; உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர மறுத்திருந்தார்.

'கைதுசெய்யப்படும் நபர்களை கடுமையாக தாக்கி பொலிஸார் சித்திரவதைக்குட்படுத்துவதாக சிலர் முன்னெடுத்துள்ள பிரசாரம்,பொலிஸாருக்கு அபகீர்த்தியை ஏற்படும் விதமாக முன்னெடுக்கப்படுகின்றது' என்று அவர் கூறினார்.

'கைது செய்யப்படும் எந்தவொரு நபரையும் தாக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்படவில்லை கைதுசெய்பவர்களை தாக்க வேண்டாம் என சகல பொலிஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பெல்லாம் குற்றவாளிகளை கைதுசெய்து பின்னர் சாட்சிகள் தேடப்பட்;டன. ஆனால், இன்று அந்த துறை முற்றிலும் மாறி, சாட்சிகள் தேடப்பட்ட பின்னரே குற்றவாளிகள் கைதுசெய்யப்படுகின்றனர்.

அத்துடன், மனித உரிமைகள் தொடர்பான பாடத்திட்டங்கள், பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பொலிஸாருக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அரசியலமைப்பின் 11ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையில் செயற்படும் பொலிஸாருக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும். இச்சட்டகோவையை மீறிய பொலிஸாருக்கு எதிராக 2006ஆம் ஆண்டு 27 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அதில் 4 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு  தண்டனை வழங்கப்பட்டதுடன் 19 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 4 வழக்குகள் தற்போதும் நிலுவையில் உள்ளன.

அதனைபோல, 2007ஆம் ஆண்டு 47 பேர் கைது செய்யப்பட்டு 5 பேர் தண்டனை பெற்றதுடன் 38 பேர் விடுதலையானார்கள். 2008இல் 48, 2009இல் 33, 2010இல் 43 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் தலா ஒருவர் மாத்திரமே குற்றவாளியாக இனங்காணப்பட்டனர். 2011, 2012, 2013, 2014ஆம் ஆண்டுகளில் 90, 37, 16,30 என பொலிஸாருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில், 44, 23, 26, 12, 12, 08, 08 என விடுதலை செய்ப்பட்டுள்ளனர். 2015ஆம் ஆண்டு 25ஆம் திகதி வரை 22 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் இவை அனைத்தும் விசாரணையில் உள்ளன.
இதேவேளை, குறைந்தளவு பலத்தை பிரயோகிக்ககூடிய  அதிகாரம், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பலத்தை பிரயோகிக்க கூடிய சந்தர்ப்பங்கள் பற்றியும் சட்டகோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பில் தனிமனித உரிமைகளை பற்றி கூறுவதுடன், 89 முதல் 99 வரையான பிரிவுகளில் தனிமனித பாதுகாப்பு பற்றி கூறப்பட்டுள்ள அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் குறைந்த பலத்தை பிரயோகிக்க முடியும்.

மேலே குறிப்பிட்ட பொலிஸாருக்கு எதிரான வழக்குகளில், குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட பொலிஸாருக்கு நட்டஈடு விதிக்கப்பட்டதுடன் பொலிஸ் திணைக்களம் சார்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் பதவி குறைப்பும் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தண்டனைக்கோவை சட்டங்களை மீறும் பொலிஸாருக்கு எதிராக, பொதுமக்கள் தாராளமாக நீதிமன்றம் செல்லலாம். ஆனால், தற்போது முன்னெடுக்கப்படும் பிரசாரம், பொலிஸாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் பொலிஸாரின் விசாரணை மீதான நம்பிக்கைத் தன்மையினை இல்லாது செய்யவும் சிலரால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றது.

இவ்வாறு ஒருசிலர் தவறுசெய்தாலும் சுமார் 86,000 பொலிஸார் உள்ள நிலையில் இது ஒரு சிறுதொகையே' என ஊடகபேச்சாளர் மேலும் கூறினார்.

இதேவேளை, துனேஷ் பிரியந்த எனும் நபர் மீது, பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக கூறி மனித உரிமை ஆணைக்குழுவில் மனுதாக்கல் செய்து, ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்து கொணடையாவை பிரபலபடுத்தி, இளம் சமுதாயத்தினருக்கு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும் ஊடகப்பேச்சாளர் கூறியிருந்தார்.

'கொண்டையாவை ஊடகங்களுக்கு முன்னிறுத்தி, அவரை பிரபலபடுத்த சட்டத்தரணி உதுல் பிரேமரத்ன உள்ளிட்ட சிலர் முயற்சிக்கின்றனர். இதற்காக பல பொய்களையும் கூறுகின்றனர். மனித உரிமைகளுக்காக போராடுகின்றோம் என்று கூறுகின்றனர். ஆனால், கொண்டையா போன்ற குற்றவாளிக்காக ஏன் இவர்கள், இவ்வாறு ஆதரவாக செயற்படுகின்றார்கள் என்று தெரியவில்லை. கொண்டையாவை, பொலிஸார்  பாரதூரமாக தாக்கியதாகக் கூறி, மனித உரிமை ஆணைகுழுவில் முறையிட்டு அது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றையும் அண்மையில் அனுப்பியிருந்தனர். அந்த அறிக்கையில் முற்றிலும் பொய்யான தகவல்கள் தரப்பட்டுள்ளன.

செயா கொலை வழக்கில்; கொண்டையா, செப்டெம்பர் 23ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு 24ஆம் திகதியன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். பொலிஸார் தாக்கியிருந்தால் அப்போது கூறியிருக்கலாம், அடுத்து, மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் 26ஆம் திகதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கூறியிருக்கலாம். ஆனால் கூறவில்லை. 

அதனையடுத்து, ஒக்டோபர் 1ஆம் மற்றும் 19ஆம் திகதிகளில் மீண்டும் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், அவர் எதுவும் கூறவில்லை. இந்நிலையில், தற்போதுதான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.


அத்துடன், சட்டத்தரணியின் அறிக்கையில், நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்ட போது, தான் பொலிஸாரால் தாக்கப்பட்டதாக கொண்டையா கூறியதாக கூறப்பட்டுள்ளது இது முற்றிலும் பொய்யான தகவல் ஏனென்றால்; கொண்டையானவை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவே இல்லை. அத்துடன், கொண்டையா மீது ஏற்கெனவே, இரண்டு வழக்குகள் உள்ளதுடன் நீதிமன்றத்தினால் 5 வருடங்கள்; ஒத்திவைக்கப்பட்ட 20 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு 6ஆம் மாதம் 21ஆம் திகதி வீடொன்றுக்குள் நள்ளிரவு 12 மணிக்கு நுழைந்து, 15 வயது  சிறுமியை தூக்கி சென்ற வழக்கில் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செயா வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் ஏற்கெனவே, நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் குற்றவாளிதான்.

அத்துடன், நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த 13 வயது சிறுமியை கடத்த முற்பட்டமை மற்றும் அச்சந்தர்ப்பத்தில் நபரொருரை தாக்கியமை ஆகிய வழக்குகள் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படடு தற்போதும் விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, இவ்வாறு பொய் தகவல்களை கூறும் சட்டத்தரணிகளுக்கு எதிராக எம்மால் வழக்குத் தாக்கல் செய்யமுடியும் அத்துடன், சட்டதரணிகள் ஒழுக்கக்கோவைக்கு அமைவாகவும் நடவடிக்கை எடுக்கமுடியும்' என்றும் ஊடகபேச்சாளர் கூறினார்.

அத்துடன், கொண்டையா என்ற பெயரை ஊடகங்கள்தான் வைத்தன என்று கூறுவதை மறுத்த பொலிஸ் ஊடகபேச்சாளர், கொண்டையாவை, நீண்ட காலமாக அந்த பெயரால் அவரது கிராமத்தவர்கள் அழைத்து வந்ததாகவும் கூறினார்.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்டனையை 2018ஆம் ஆண்டுக்குள் கொண்டையா அனுபவிக்க வேண்டும். அவ்வாறாயின், அவர் ஒரு குற்றவாளி. நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக இவ்வாறான வழக்கறிஞர்கள் செயற்படுவது மிகவும் வருந்தத்தக்க செயலாகும்' என்றும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

குற்றஞ்சாட்டப்பட்டவர், அவருக்காக வாதிடும் சட்டத்தரணிகள் குழு,பொலிஸார் என இவர்கள் அனைவரும் தத்தமது தரப்பு நியாயங்களை கூறினாலும். நீதிமன்றத்தினால் ஏற்கெனவே, தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு ஆதரவாக இவ்வாறு சட்டத்தரணிகள் வரிந்துகட்டி செய்ற்படுவது அவ்வளவு சிறப்பானதாக இல்லை. பொதுமக்கள் பிரச்சினை தொடர்பில் இவ்வாறு வழக்கறிஞர்கள் குரல் கொடுத்தால் அனைவரும் அவர்களுக்கு ஆதரவு தெரவிக்கலாம். அதில் நியாயம் உள்ளது.

ஆனால், தற்சமயம் நாட்டில் சட்டம், ஒழுங்கு, நீதியை காப்பாற்றும் தரப்பினரின் செயற்பாடுகள் நாட்டின் எதிர்காலத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தும் என்ற கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது. உண்மையில் கொண்டையா போன்றவர்களை ஊடகங்களின் முன் நிறுத்தி அவர்களுக்கு பிரபலம் தேடித்தருவது, நாட்டின் எதிர்கால சந்ததியினரை தவறான வழிக்கு கொண்டு செல்ல கூடும். தவறு செய்தாலும் ஊடகங்கள் ஊடாக பிரசித்தமாக முடியும் என்ற எண்ணம் சிறுவர்களின் மனதில் விழுந்தால் அவை விஷச்செடியாய் வளர்ந்து நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிவிடும்.

பொதுமக்களின் சேவையாளர்கள் என்ற அடையாளத்துடன் தம்மை அறிமுகப்படுத்தி கொள்ளும் யாராக இருந்தாலும், நன்மை தீமைகளை சற்று சீர்தூக்கி பார்த்து செயற்படுவார்களாக இருந்தால், அதுவே நாட்டின் எதிர்காலத்துக்கு நன்மைபயக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .