Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 ஜூன் 05 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் 1972ஆம் ஆண்டு எட்டப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ஆம் திகதி ‘உலக சுற்றுச்சூழல் தினமாக’ அறிவிக்கப்பட்டது.
பெருகி வரும் மக்கள் தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.
ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினத்துடன் இணைந்து மே 30ஆம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரை சுற்றுச்சூழல் வாரத்தை செயல்படுத்த அனைத்து ஏற்பாடுகளும் இலங்கையில் செய்யப்பட்டது.
இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் ‘பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்போம்’, ‘வளர இடம் கொடுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ் பல திட்டங்கள் செயல்படுத்தப்படும். சுற்றுச்சூழலைப் புத்துயிர் பெறத் தேவையான இடத்தைப் பெறும்
நோக்கில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்றும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.
உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு சடங்காகக் கொண்டாடப்படுவதில்லை,
மாறாக, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாட்டிற்கும், மக்களுக்கும், உலக சமூகத்திற்கும் பொறுப்புக்கூறக்கூடிய ஒரு பொறுப்பான திட்டமாக இதை மாற்றுவதே இதன் நோக்கம்.
சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்கள், அனைத்து அரசு நிறுவனங்கள், தூய்மை இலங்கை செயலகம் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியவை இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தை ஒன்றாகக் கொண்டாடும் .
மனித இயற்கையை ஆக்கிரமித்துக் கொண்டே செல்கின்றான். இதனால், சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது. அதன் தாக்கத்தை மனிதனே அனுபவிக்கவேண்டியவனாக இருக்கின்றான். எனினும், கடும் மழை, மண்சரிவு, வெள்ளம், வெப்பம் ஆகியவற்றின் தாக்கத்தின் போது, இயற்கையையே மனித தூஷிக்கின்றான்.
மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்துவருகின்றன.
எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாக செய்யவேண்டியது மக்கள்தொகை பெருக்கத்தைக்கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.
AI இன் தாக்கத்தினால், 2300 ஆம் ஆண்டளவில் மக்கள் தொகை 10 கோடியாகக் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. தொழில் வாய்ப்பு இன்மையால், பெரும்பாலானவர்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளமாட்டார்கள். இதனால், மக்கள் தொகையில் பாரியளவான வீழ்ச்சி ஏற்படுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.
உலக வெப்ப மயமாதல் எனும் பிரச்சினையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்துச் செயலாற்றுவதற்கான
ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்... விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன.
அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தைத் தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!
முன்னோர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு...
நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாகக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர்.
உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர். நம்மைச் சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும்
என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.
குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5,000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1,000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு.
வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.
மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.
இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது.
மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாகப் பார்க்கத் துவங்கிவிட்டான்.
நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை.
இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய முற்பட்டோமானால், முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கள்தொகை பெருக்கம்தான். சுதந்திரம் பெறும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம்.
இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.
காரணங்களும் தீர்வுகளும்...
மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும்,
ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்து வருகின்றன.
எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாகச் செய்யவேண்டியது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.
அடுத்த படிகளாக, நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால்தடங்களைக் குறைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான்.
தற்போது உள்ள நிலைவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் ‘கார்பன்’ கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.
சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க...
பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.
பொதுவாக நாம் மகிழ்ந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்குப் பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும் அல்லவா?! அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்குப் பதிலாக மிதிவண்டியைக் கூடுமானவரைப் பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
காகிதப் பயன்பாட்டில் கவனம்...
செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.
“இலங்கையில் ஒவ்வொரு நாளும் 900-950 தொன் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் சுற்றுச்சூழலில் கொட்டப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், நாங்கள் சுமார் 50% சேகரிக்கிறோம்.
அதில், 10-15% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது” என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் சுற்றுச்சூழலில் கொட்டப்படும் பிளாஸ்டிக்கின் அளவு இருந்தபோதிலும், பிளாஸ்டிக் மறுசுழற்சி தொடர்பான தொழில்களுக்கு போதுமான பிளாஸ்டிக் இல்லாதது ஒரு பிரச்சனையாகும், ஏனெனில்,
அதை முறையாகச் சேகரிக்க ஒரு வழிமுறை இல்லை. சுற்றுச்சூழலைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சு இல்லாத சுற்றுச்சூழலை விட்டுச்செல்வதே எமது பொறுப்பாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .