Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.ஜெபநிஷா,
உளவளத் துணை மாணவி,
தேசிய சமூக அபிவிருத்தி நிர்வகம்.
தன்னுயிரை மாய்த்தல் (Suicide) என்பது, ஒரு நபர் உன்னத மன அழுத்தம், பெரும் வலியுணர்வு அல்லது பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண முடியாத நேரத்தில், தன்னைத்தானே காயப்படுத்தி உயிரை இல்லாமல் செய்யும் செயல் ஆகும். இது தற்காலிகமான பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வாகும் என நினைக்கப்படும் ஓர் ஆபத்தான மனநிலை.
அந்தவகையில் இன்றைய சமூகத்தில் இளம் தலைமுறையினர் பல எதிர்ப்புகள் போட்டிகள் எதிர்பார்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப அடிக்கடி மாறும் சூழ்நிலைகளில் வாழ்கின்றனர். இதனால் அவர்கள் மீது உருவாகும் மன அழுத்தம் அவர்களது வாழ்க்கைத் தரத்தையும் மனநலத்தையும் பாதிப்பதோடு தவறான முடிவுக்கு செல்வதற்கு தள்ளுகின்றது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெருக்கடிகள் சுமைகள் என்பவற்றால் இவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இவ்வாறு நெருக்கடி மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கும் உளவள துணை இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. அத்தோடு அவர்களது நெருக்கடி தன்மையைக் குறைக்க உதவுகின்றது.
இன்றைய இளம் சமுதாயத்தினருக்கு மன அழுத்தத்தைப் பல விடயங்கள் தூண்டுகின்றன. அதாவது கல்வியில் ஏற்படும் பிரச்சனைகள், தொழில்நுட்பத்தினால் உருவாகும் ஒப்பீடு, வேலைவாய்ப்பு, பிரச்சினைகள் மற்றும் இன்றைய காலத்தில் அதிகமாக காதலினால் ஏமாற்றப்பட்டு மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதன் காரணமாக தங்கள் வாழ்க்கையில் இனி முடிவும் மரணம் தான் என்று பலர் தவறான முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.
அந்த வகையில் இளம் சமூகத்தினருக்கு கல்வியில் ஏற்படும் பிரச்சனைகளை ஆராய்ந்து பார்த்தால் தேர்வு, மதிப்பெண் என்பவற்றால் தன்மானம் குறைதல் என்று மனந்தளர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர் ,மற்றும் தொழில் நுப்பத்தினால் ஏற்படும் ஒப்பீடு அதாவது இன்று இளம் சமூகத்தினர் கூடுதலாக சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்றனர். இதனால் மற்றவர்களின் நிகரற்ற தருணங்களைப் பார்க்கும்போது, ஏற்றத்தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் உள நெருக்கிட்டுக்கு உள்ளாகின்றனர்.
இன்றைய நவீன காலத்தில் எமது நாட்டில் வேலை வாய்ப்பு பிரச்சனை என்பது மேல் ஓங்கிக் காணப்படுகிறது. அதாவது கல்வி கற்றும் தகுதியான வேலை கிடைக்காமை,தகுதியான ஊதியம் கிடைக்காமை போன்ற காரணங்களினால் எதிர்கால சந்ததியினர் தமது எதிர்காலத்தைக் குறித்து பயத்தோடு வாழ்ந்து மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர்.
நாளுக்கு நாள் மாற்றம் அடைந்து வரும் உலகில் இளம் சமூகத்தினருக்கு ஏற்படும் பாரிய பிரச்சினைகளில் ஒன்றாகக் காதல் காணப்படுகிறது. உறவுகள் பிரிவுக்குள்ளாகின்ற போது, பல இளம் சமுதாயத்தினர் நம்பிக்கை இழந்து மன உளைச்சலுக்கு உள்ளாகி மரணம் தான் முடிவென்று தவறான முடிவுக்கு செல்கின்றனர்.
மேல் கூறப்பட்ட பிரச்சினைகளினால் இளம் சமுதாயத்தினர் தூக்கமின்மை, மனச்சோர்வு, உண்ணாமல் இருத்தல், சமூக விலகல், நம்பிக்கை இழத்தல், போதை பழக்கம், மனநல சிக்கல், போன்ற செயல்பாட்டுக்கு அடிமையாகின்றனர் .இதன் இறுதித் தருணமாக எல்லாப் பிரச்சினைக்கும் முடிவு தன்னுயிரை மாய்த்தல் என்ற தவறான துப்பாக்கிய நிலைக்கு இளம் சமூகத்தினர் செல்கின்றனர்.
இந்த நிலையில், இவ்வாறான பிரச்சினைக்கு ஒருவரை நாடுவதன் மூலம் உணர்வுகளை பகிர்வதற்கான பாதுகாப்பான சூழல், தன்னம்பிக்கை வளர்க்கும் வழிமுறைகளான வேலை வாய்ப்பு, காதல் தோல்வி, போன்ற தீவிர மன வேதனைகளை சமாளிக்கு ஆற்றல், வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் கிடைக்கின்றது.
இவ்வாறான பிரச்சினைக்கு முடிவு தன்னுயிரை மாய்த்தல் அல்ல தன்னுயிரை மாய்த்தல் என்பது ஒரு தீர்வு அல்ல. அது தற்காலிகமான பிரச்சனையின் தீர்வை தேர்ந்தெடுப்பது என்பது மிகப்பெரிய தவறு என்று உலகளத்தனையாளர் சுட்டிக்காட்டுவார். ஆகவே வேலை, காதல், கல்வி இவ்வாறான பிரச்சனைகள் எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதிதான், அது வாழ்க்கையை பூரணப்படுத்தாது. ஆகவே, தன்னுயிரை மாய்த்தல் என்பது பிரச்சினைக்கு முடிவல்ல.
35 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
3 hours ago