Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
S.Renuka / 2025 மே 11 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘அம்மா’…..! என்ற வார்த்தைக்கு உலகமே அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.
அன்னையர் தினம் பிறந்தது எப்படி?
அமெரிக்காவைச் சேர்ந்த அன்னா மரியா ஜீவ்ஸ் ஜர்விஸ் என்பவரின் மகள் அன்னா மேரி ஜர்விஸ். தனது அம்மாவின் உந்துதலின் பேரில் அமெரிக்காவில், குழந்தை இறப்பு விகிதத்தை குறைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். இதன் ஒரு பகுதியாக 'மதர்ஸ் டே ஒர்க் கிளப்' என்ற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் அடிக்கடி மருத்துவர்களை வரவழைத்து, தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பு, பேணி காத்தல், ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, எவ்வாறு கல்வி கற்பிப்பது போன்ற பயிற்சிகளை அளித்தார்.
ஒருமுறை தனது தாய் நடத்தி வந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலையில் போதித்துக் கொண்டு இருக்கும்போது, அன்னையைப் போற்றுவதற்கு ஒரு நாள் 'அன்னையர் தினம்' வரும் என்று பாடி இருந்தது அவரது காதுகளிலும், நினைவிலும் வந்து வந்து சென்றது.
அவரது அம்மா 1905ஆம் ஆண்டில் இறந்து விட, அவரது ஆசையை நிறைவேற்றும் நோக்கத்தில், 25 ஆண்டுகள் அவரது அம்மா போதித்து வந்த ‘ஆண்ட்ரூஸ்’ சர்ச்சுக்கு, 1908, மே 10ஆம் திகதி, அன்னையர்களை வரவழைத்து அவர்களுக்கு பூச்செண்டுகள் கொடுத்து அனுப்பினார். அன்றைய தினத்தை அன்னையர் தினமாகவே கொண்டாடினார்.
அன்னையர் தினத்தை அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து அன்னா மேரி போராட்டம் நடத்தி வந்த நிலையில், அமெரிக்காவின் 28ஆவது அதிபரான தாமஸ் வுட்ரூ வில்சன், அன்னையர் தினத்துக்கான பிரகடனத்தில் 1914, மே 9ஆம் தேதி கையெழுத்திட்டார். இதையடுத்து, அன்னையர்களுக்கு மரியாதை, அன்பு செலுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 2ஆவது ஞாயிறு அன்னையர் தினமாக கொண்டாடப்படும், அன்று தேசிய விடுமுறை விடப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்தது.
பரிசு கொடுங்கள்...
அந்த அன்னையைக் கொண்டாட, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை, அன்னையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று (மே 11) அன்னையர் தினம். இந்த அன்னையர் தினத்தில் அம்மாவை குளிர்விக்க, ஆச்சரியப்படுத்த, அன்று ஒரு நாளாவது அவளை அமர வைத்து ஓய்வு கொடுத்து, பரிசுகள் கொடுத்து, விரும்பியதை வாங்கிக் கொடுத்து, வாழ்த்து அட்டைகள் வாசித்து, அவளுடன் பொழுதை போக்குங்கள்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
37 minute ago
37 minute ago
53 minute ago