Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Tharaniya / 2025 மே 25 , பி.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பண்டாரநாயக்க 1959இல் கொலை செய்யப்பட்டவையானது சுதந்திரத்திற்கு பிந்தைய இலங்கையின் ஒரு தசாப்தகால பொருளாதாரக் கொள்கைகளை முடிவுக்குக் கொண்டுவந்தது.
சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையின் பொருளாதார விரிவாக்கத்தைத் துரிதப்படுத்தும் முயற்சியின் சில வெற்றிகளையும், அந்த முயற்சி உருவாக்கிய சில சிக்கல்களையும் ஆராய்ந்த பிறகே, 1960 முதல் காலகட்டம் பற்றிய விவாதத்திற்குச் செல்ல முடியும்.
அபிவிருத்தி முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றாக வேண்டும். டிசெம்பர் 1960 முதல் கடுமையான இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை வன்முறையாகவும் அவசரமாகவும் அரசாங்கம் விதித்தது,
அன்றிலிருந்து தீவின் மக்கள் மீது சுமத்தப்பட்ட துன்பங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட வளர்ச்சியின் மந்தநிலை அனைத்தும் ஏதோ ஒரு வகையான அடிப்படைத் தோல்வியைக் குறிக்கின்றன.
1950களின் அபிவிருத்தி முயற்சியில் ஏற்பட்ட தோல்வி, உண்மையான உற்பத்தி வளர்ச்சியின் நியாயமான திருப்திகரமான விகிதத்தை வழங்கத் தவறியதால் ஏற்பட்டதல்ல, மாறாக இந்த வளர்ச்சியின் இயல்பான விளைவாக ஏற்பட்ட செலவின ஓட்டங்களை போதுமான அளவு கையாளத் தவறியமையால் ஏற்பட்டது.
தனியார்த் துறையில் அதிக நுகர்வு மற்றும் இறக்குமதி போக்குகள், பொது வருவாயில் மந்தநிலை, பொது முதலீட்டு ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகள், போதுமான அளவு முதலீட்டைத் தூண்டத் தவறியது போன்றனவே இதற்கான காரணங்களாகும்.
இந்தப் பற்றாக்குறைகள் எதுவும் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான சீரான செயல்பாட்டிற்கு ஆபத்தானவை அல்ல. அவை அனைத்தும் அடையக்கூடிய உற்பத்தி வளர்ச்சி விகிதத்தைக் குறைக்க உதவியது, மேலும் அவை அனைத்தும் அதிகரித்து வரும் வரவு - செலவு சமநிலை (balance of payments) அழுத்தங்களுக்குப் பங்களித்தன.
ஆனால், போதுமான பொதுக் கொள்கைகள் இயற்றப்பட்டிருந்தால், குறைந்த வளர்ச்சி விகிதத்தில் வெளிப்புற சமநிலையை அடைந்திருக்கலாம்.
அபிவிருத்திச் சூழலில் அதிகப்படியான மொத்த தேவையின் தோற்றம் இயல்பானது, ஆனால், நடப்பு மற்றும் மூலதனச் செலவினங்கள் முறையே வெளிப்புறப் பற்றாக்குறைகள் மூலம் நிதியளிக்கப்படும் விகிதாச்சாரத்தில் இது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது.
அதிக நடப்புச் செலவினங்களை முதலீடாக மாற்றுவதன் மூலம் அதிக வளர்ச்சி விகிதத்தை உருவாக்க முடியும்.ஆனால், முதலீட்டு விகிதத்தைப் பொருட்படுத்தாமல், வெளிப்புற ஏற்றத்தாழ்வு பிரச்சினையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.
1960இல் இலங்கையைத் தாக்கிய பேரழிவை, வெளிநாட்டு சொத்துக்கள் குறைவதற்கு முன்பே அடிப்படை கொடுப்பனவு சமநிலையில் உள்ள பற்றாக்குறைகள் சரிசெய்யப்பட்டிருந்தால் மட்டுமே தவிர்த்திருக்க முடியும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உயர் மட்டங்களிலிருந்து இந்த சொத்துக்களின் சில திட்டமிடப்பட்ட குறைப்பு பாதுகாக்கக்கூடியதாக இருந்திருக்கும்,
ஆனால், ஒரு விவேகமான குறைந்தபட்ச அளவை அடைந்தவுடன், இறக்குமதிகளின் வளர்ச்சியை வெளிப்புறக் கணக்குகளில் அடிப்படை சமநிலைக்கு இசைவான வரம்புகளுக்குள் வைத்திருப்பது முற்றிலும் அவசியமாகியிருக்கும்.
ஐம்பதுகளின் பிற்பகுதியில் இது செய்யப்படவில்லை என்பதால், அறுபதுகளின் முற்பகுதியில் இந்த நெருக்கடி அரசாங்கத்தின் மீது திணிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக, அது செய்யப்பட வேண்டியதை விட சில ஆண்டுகள் கழித்தும், விருப்பத்திற்குப் பதிலாக அவசியத்தாலும் செய்யப்பட்டது என்பது ஒரு முக்கியமான வேறுபாடாக நிரூபிக்கப்பட்டது.
மார்ச் 1960 தேர்தல்கள் பண்டாரநாயக்கவின் படுகொலையின் நிழலில் நடத்தப்பட்டன, டபிள்யூ. தஹநாயக்கவின் இடைக்கால அரசாங்கத்தின் தோல்வியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.சு.க.) தேர்தல் பிரசாரத்தை நில அமைச்சர் சி.பி.டி.சில்வா வழிநடத்தினார். பண்டாரநாயக்க, வேட்பாளராக இல்லாவிட்டாலும், மேடைகளில் தோன்றி தனது மறைந்த கணவரின் நற்பண்புகளைப் புகழ்ந்தும், தனக்கு ஏற்பட்ட பேரழிவை நினைத்துத் துக்கமடைந்தும் இருந்தார்.
ஆண்டு சுயமாகத் தன்னைத் தனிமைப்படுத்திய பிறகு தேசிய அரசியலில் மீண்டும் நுழைந்த டட்லி சேனநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) பிரசாரத்திற்கு தலைமை தாங்கினார். தேர்தலின் போது எந்த கடுமையான பொருளாதார பிரச்சினைகளும் எழுப்பப்படவில்லை. ஐதேக ஒரு கடுமையான தமிழர் எதிர்ப்பு பிரச்சாரத்தை நடத்தி
145 இடங்களில் 50 இடங்களை வென்றது. ஸ்ரீ.சு.க. 46 இடங்களையும் வென்றன. தமிழரசுக்கட்சி 15 இடங்களை வென்றது. பாராளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கொண்ட கட்சியின் தலைவராக இருந்ததால், டட்லி சேனநாயக்க அரசாங்கத்தை அமைத்தார்.
ஆனால், ஐ.தே.கவின் இந்த சிறுபான்மை அரசாங்கம் ஏப்ரல் 19 அன்று சிம்மாசன உரையின் மீதான வாக்கெடுப்பில் உடனடியாக தோற்கடிக்கப்பட்டது, மறுநாள் பாராளுமன்றம் மீண்டும் கலைக்கப்பட்டது.
ஜூலை 1960 தேர்தல்களுக்கு, ஐ.தே.க. தோற்கடிப்பதற்காக ஸ்ரீ.சு.கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி (ல.ச.ச.க.) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (க.க.) ஆகியவற்றுடன் உடன் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
இந்த முறை பண்டாரநாயக்க தானே ஸ்ரீ.சு.கட்சியின் பிரசாரத்திற்குத் தலைமை தாங்கினார். 145 இடங்களில் 75 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றார். ஸ்ரீ.சு.க. பதிவான வாக்குகளில் 33.6% மட்டுமே பெற்றதால், ல.ச.ச.க. மற்றும் கக உடனான ஒப்பந்தத்தால் அது அதிக நன்மை அடைந்தது என்பது தெளிவாகிறது.
உண்மையில் ஐ.தே.க. அதை விட அதிக வாக்குகளைப் (37.6%) பெற்றது. ஆனால், 30 இடங்களை மட்டுமே பெற்றது. தமிழரசுக் கட்சி 16 இடங்களையும், ல.ச.ச.க. 12 இடங்களையும், வென்றது.
பண்டார நாயக்க பிரதமராகப் பதவியேற்றார், இதன் மூலம் உலகின்
முதல் பெண் பிரதமரானார். தேர்தலின் போது, பண்டாரநாயக்கவை மிகவும் இழிவான முறையில் கேலிச்சித்திரம் செய்த லேக் ஹவுஸ் செய்தித்தாள்
குழுவை வாயடைக்கச் செய்ததே அவரது முதல் நடவடிக்கையாகும்.
அரசாங்கம் பெற்றோலிய விநியோகத்தை தேசியமயமாக்கத் தொடங்கியது. அது பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தை நிறுவி, ஷெல், கால்டெக்ஸ் மற்றும் எஸ்ஸோ எண்ணெய் நிறுவனங்களின் சொத்துக்களில் 25மூ ஐ எடுத்துக் கொண்டது. இது துணிவான அதேவேளை முற்போக்கான நடவடிக்கையாகும்.
தேசிய மயமாக்கலுக்கு உள்ளூர் பத்திரங்களில் இழப்பீடு வழங்க முன்வந்தாலும், இந்தச் சாதனமும் வழங்கப்பட்ட தொகையும் எண்ணெய் நிறுவனங்களுக்கும் அமெரிக்க அரசாங்கத்திற்கும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தன.
இதனால் அமெரிக்க ஜனாதிபதி கென்னடி 1962ஆம் ஆண்டு அமெரிக்க வெளிநாட்டு உதவிச் சட்டத்தின் பிரிவு 620E (ஹிக்கன்லூப்பர் திருத்தம்) இன் கீழ் இலங்கைக்கான 3 மில்லியன் டாலர் உதவித் திட்டத்தை நிறுத்தினார்.
இது அமெரிக்க குடிமக்களின் சொத்துக்களை தேசிய மயமாக்கும் நாடுகளுக்கு உடனடி மற்றும் போதுமான இழப்பீடு வழங்காமல் அமெரிக்க அரசாங்கம் உதவி வழங்குவதைத் தடை செய்கிறது.
பெரிய சக்திகளின் பழிவாங்கலுக்கு அஞ்சாத பண்டாரநாயக்காவின் அரசாங்கம் காப்பீட்டு வணிகத்தையும் தேசியமயமாக்கத் தொடங்கியது. 1961ஆம் ஆண்டில், அரசாங்கம் மக்கள் வங்கியை ஒரு வணிக வங்கியாகவும் கிராமப்புற கடன் ஆதாரமாகவும் நிறுவியது.
1960ஆம் ஆண்டு தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்த அரசாங்கத்தின் நிதியமைச்சர் பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க, “தேசிய பொருளாதாரத்தின் முழுமையான வளர்ச்சியையும் சோசலிச சமூகத்தை நோக்கிய முன்னேற்றத்தையும் நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான பட்ஜெட்டுகளில் இது முதலாவது” என்று கூறினார்.
அரசாங்கம் நிதிப் பற்றாக்குறையுடன் ஆட்சியைத் தொடர்ந்தது.
1960-64 ஆண்டுகளில், இந்தப் பற்றாக்குறை ஆண்டுக்கு சராசரியாக ரூ.440 மில்லியன் அல்லது மொத்த செலவினத்தில் 20% ஆக இருந்தது.
மூலதனச் செலவுகள் தேக்கமடைந்தன. பற்றாக்குறையை நிதியளிப்பதற்காக, அரசாங்கம் விரிவாக்க வங்கிக் கடன் வாங்குவதற்கும் காப்பீட்டுக் கழகம், ஊழியர் சேமலாப நிதி மற்றும் பிற அரசுக்குச் சொந்தமான சேமிப்பு நிறுவனங்கள் போன்ற வங்கி அல்லாத நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்குவதற்கும் தலைப்பட்டது.
கருவூல உண்டியல்களுக்கான சட்டரீதியான வரம்பு 1961 இல் ரூ.750 மில்லியனில் இருந்து 1962இல் ரூ. 1,000 மில்லியனாகவும், மார்ச் 1963இல் ரூ.1,150 மில்லியனாகவும் அதிகரிக்கப்பட்டது. இது வரவிருந்த நெருக்கடியைக் கோடுகாட்டியது.
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
19 Oct 2025