2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதுவருடப் பிறப்பும் சுப நேரங்களும்

Editorial   / 2023 ஏப்ரல் 12 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, ஸ்ரீ வித்யா ஜோதிட நிலையம்                  

 

 

 

 

 

 

 

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி புது வருடம் பிறக்கும் நேரம்:

சித்திரை முதலாம் நாள் 14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல்  02.03 இல் புது வருடம் பிறக்கின்றது. 

திருக்கணித பஞ்சாங்க கணிப்பின்படி சித்திரை மாதம் முதலாம் நாள் 14.04.2023 வெள்ளிக்கிழமை பிற்பகல் 02 .59இல் சோபகிருது  வருடம் பிறக்கின்றது.

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி விஷு புண்ணிய காலம் :
 
வாக்கிய பஞ்சாங்க கணிப்பின்படி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.03 இல் இருந்து பிற்பகல் 06.03  வரையிலான காலம் விஷு புண்ணிய காலம் ஆகும். 

திருக்கணித  பஞ்சாங்கத்தின் படி விஷு புண்ணிய காலம் :

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி கணிப்பின் படி வெள்ளிக்கிழமை முற்பகல் 10.59 இல் இருந்து மாலை 06.59 வரையிலான காலம் விஷு புண்ணிய காலம் ஆகும். 

விஷு புண்ணிய காலத்தில் மருத்துநீர் ,பஞ்சாங்கங்களில் குறிப்பிட்ட  நேர இடைவெளிக்கு அமைய , வாக்கியத்தின் படி  சிரசில் கொன்றை இலையும், காலில் புன்கிலையும் வைத்து ஸ்தானம் செய்க.
                               
 புத்தாடை  

வாக்கியத்தின் படி வெள்ளை நிறம் உள்ள பட்டாடை ஆயினும் வெள்ளை கரை அமைந்த புதிய பட்டாடை ஆயினும் அணிய வேண்டும்.

திருக்கணிதத்தின் படி வெண்ணிற  பட்டாடை ஆயினும் அல்லது மஞ்சள் கரை கொண்ட வெண்ணிற ஆடை அணிவது நல்லது.
       
புது வருட ஆபரணம்

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி முத்து வைரம் இழைத்த ஆபரணம், திருக் கணித பஞ்சாங்கத்தின் படி வைரம் பதிக்கப்பட்ட ஆபரணம்.

 தோஷம் உள்ள நட்சத்திரங்கள்

ரோகிணி , மிருகசீரிடம் 3ம், 4ம், பாதம், திருவாதிரை ,புனர்பூசம் 1 ம், 2ம், 3ம்,  பாதம் அத்தம்  ,உத்தராடம்   2ம், 3ம், 4ம் பாதம் ,திருவோணம் , அவிட்டம் 1ம் , 2ம் பாதம்                     

 கைவிசேடம் 
      
வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2 ( 15. 04. 2023) சனிக்கிழமை காலை 07 .52 முதல்   09.00 மணி வரை . 
சித்திரை 3( 16.04.2023) ஞாயிற்றுக்கிழமை  காலை  07. 49 முதல் 9 .48 வரை

திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சித்திரை 2  (15 .04. 2023 ) சனிக்கிழமை காலை 06 .45 முதல் 07 .30 வரை.
சித்திரை 2 (15 .4 .2023 ) காலை 08 .00 மணியில் இருந்து 8.55  வரை 
சித்திரை 3 ( 16 .04. 2023 ) ஞாயிறு காலை 08 .00 மணி முதல்  09.30  வரை.
சித்திரை 3 ( 16. 04 .2023 ) ஞாயிறு பகல் 12. 10  முதல்  1. 15 வரை.

புது வருட வழிபாடு

சுகந்த சந்தனம் பூசி நறு மலர் சூடி சூரிய பொங்கல், பூஜைகள் செய்து  விநாயகர், குலதெய்வ வழிபாடு  செய்து குரு,பெற்றோர் மற்றும் பெரியோரை வணங்கி அறுசுவை உணவுடன் கடுகு, எள், புளி, நெல்லிக்கனி சேர்த்து அருந்தி ,தாம்பூலம் தரித்து கண்ணாடி, தீபம், நிறைகுடம் , திருமுறை புத்தகங்கள் ,தாமரை, பழ வகைகள், மஞ்சள் , குங்குமம் ,சந்தனம், வெற்றிலை, பாக்கு ஆகிய மங்கள பொருட்களை தரிசித்து புதிய வருட பலன்களை வாசிப்பதும் கேட்பதும் மங்கலமாகும்.

மருத்து நீர் 

தாழம் பூ , தாமரைப் பூ, மாதுளம் பூ, துளசி,விஷ்ணு கிராந்தி,  சீதேவியர் செங்கல நீர் ,வில்வம் ,அருகு, பீர்க்கு, பால் ,கோசலம் ,கோமயம் ,     கோரோசனை ,மஞ்சள் ,மிளகு ,திப்பிலி ,
சுக்கு  இவற்றினை சுத்தமான நீரிலிட்டு காய்ச்சிக்கொள்க.

புதுக்கணக்கு

வாக்கியத்தின்படி சித்திரை 28 (11.05. 2023 ) வியாழக்கிழமை பகல்  10. 24 முதல் நண்பகல் 12. 27 வரை

திருக்கணிதத்தின் படி சித்திரை 13 ( 26 .04.2023) புதன்கிழமை காலை 07. 32 முதல் 09.05 வரை


சித்திரை 20 (03 .05. 2023) புதன் காலை 07.30 முதல்  08.40 வரை


 சித்திரை 22 (05.05.2023)வெள்ளிக்கிழமை காலை 07.15 முதல் 08. 28 வரை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .