2026 ஏப்ரல் 07, செவ்வாய்க்கிழமை

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

S.Renuka   / 2026 ஏப்ரல் 07 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைக்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாளை புதன்கிழமை (08) முதல் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை ரயில்வே திணைக்களம் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை  என்பன இணைந்து இந்த விசேட போக்குவரத்துத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

இதற்கு இணையாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து சேவைகளின் ஊடாக நாளாந்தம் மேலதிகமாக 800 பயணத் தடங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், இலங்கை ரயில்வே திணைக்களம் தற்போது சேவையில் ஈடுபடுத்தியுள்ள ரயில்களுக்கு மேலதிகமாக, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து விசேட ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் தமது ஊர்களுக்குச் செல்வதற்காக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள நகரங்களில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு சுமார் 15 இலட்சம் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .