2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

30 அமைச்சர்களுக்கு வாகனங்கள் வாங்க ரூ.100 கோடிக்கு மேல் கோரல்

Thipaan   / 2016 ஜூன் 07 , பி.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் அடங்கலாக 30 பேருக்குப் புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு, 118 கோடியே 25 இலட்சம் ரூபாய்க்கு மேல் கேட்டு, குறைநிரப்புப் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சரின் சார்பில் இதனை சமர்ப்பிப்பதாக ஆளும் கட்சியின் பிரதான கொறடாவான ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

இந்த குறைநிரப்பு பிரேரணையின் ஊடாக சில அமைச்சர்களுக்கு இரண்டு வாகனங்களுக்காக நிதி கோரப்பட்டுள்ளது. இதேவேளை, பிராந்திய அபிவிருத்தி அமைச்சருக்கு இரண்டு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு 7 கோடி ரூபாய் கோரப்பட்டுள்ளது. இவை எல்லாம் மூலதனம் செலவீனமாகவே கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .