2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

'அரசாங்கம் தாய்நாட்டை காட்டிக்கொடுத்து விட்டது'

Gavitha   / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இந்த அரசாங்கம் எமது தாய்நாட்டை காட்டிக்கொடுத்து விட்டது என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் சர்வதேசத்துக்கு தேவையான வகையில் செயற்படுகின்றது. வெளிநாட்டு நீதிபதிகள் கொண்ட சர்வதேச விசாரணை குழுவினால் நாட்டுக்கு எவ்வாறு நன்மை பயக்கும். அது உள்ளூர் பொறிமுறையாவது எவ்வாறு என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

அமெரிக்காவின் தேவைக்கு ஏற்பவே நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது. எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.

நாரஹேன்பிட்டிய, அபயராம விஹாரையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X