Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Kanagaraj / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அவசர தொலைபேசி இலக்கமான 1929 என்ற இலக்கத்துக்கு ஒவ்வொருநாளும் கிடைக்கின்ற முறைபாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது.
இந்த முறைபாடுகளில் கூடுதலானவை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் விடயதானங்களுக்கு உட்பட்டது அல்ல என்று அவ்வதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
முறைபாடுகளில், பாடசாலைக்கு மாணவர்களை சேர்த்துகொள்வதில் பிரச்சினை, காணி தொடர்பான முரண்பாடு, நிதியுதவி பெற்றுக்கொடுத்தல், சர்வதேச பாடசாலைகளில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை, வீட்டுப்பிரச்சினை மற்றும் தனியார் வகுப்புகளில் அறவிடப்படும் கட்டணங்கள் தொடர்பிலானவையாகும்.
இதனால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பல்வேறான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளது என்பதனால் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கையாளக்கூடிய பிரச்சினைகளை மட்டும் மேற்குறிப்பட்ட அவசர இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு அச்சபை அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
18 May 2025
18 May 2025