2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

'அவரை தள்ளி விட்டதை நான் கண்டேன்'

Gavitha   / 2016 ஜனவரி 21 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எனது கணவர் எந்தவொரு குற்றச்செயலிலும் ஈடுபட்டதில்லை. எனினும் எங்காவது அநீதி இழைக்கப்படுமிடத்து, அதனை தட்டிக்கேட்கவும் தயங்க மாட்டார். அவரை மாடியிலிருந்து தள்ளிவிட்டதை நான் என் கண்களால் கண்டேன்' என்று, இரண்டு வாரங்களுக்கு முன்னர் எம்பிலிபிட்டியவில் படுகொலை செய்யப்பட்ட சுமித் பிரசன்ன என்ற இளைஞனின் மனைவியான ஷஷிக்க நிஷாமனி முனசிங்க தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை (20) மருதானையில் இடம்பெற்ற ஊடகவியாலளர் மாநாட்டில் உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் விதத்தில் தனக்கு எந்தவொரு திருப்தியும் இல்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X