2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

34ஆவது பொலிஸ்மா அதிபர் யார்?: மூவரின் பெயர் சிபாரிசு

Gavitha   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் என்.கே இலங்கக்கோன் ஓய்வு பெற்றதன் பின்னர், நாட்டின் 34ஆவது பொலிஸ்மா அதிபரை நியமிப்பதற்காக, மூவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர்களான பூஜித ஜயசுந்தர, எஸ்.எம்.விக்ரமசிங்க மற்றும் சந்தன விக்ரமரத்ன ஆகிய மூவரின் பெயர்களே, ஜனாதிபதி செயலகத்தினால், அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஐந்து வருடங்கள் சேவையிலிருந்த பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன், தனது பதவியிலிருந்து இன்று (11) திங்கட்கிழமையுடன் ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளார்.

பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், இரத்தினபுரி இம்புல்பே பின்னவல கனதிரியாங்வலவில், பொலிஸ் நிலையமொன்றை நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.

இது இலங்கையின் 443ஆவது பொலிஸ் நிலையமாகும். இரத்தினபுரி மாவட்டத்துக்கு இது 26ஆவது பொலிஸ் நிலையமாகும்.

பொலிஸ் நிலையத்தை திறந்துவைத்ததன் பின்னர் உரையாற்றிய அவர், பதவிகிடைத்ததன் பின்னர் கிராமத்தை மறந்துவிடவில்லை. கல்விக்கற்ற உடகம மஹா வித்தியாலயம், கனதிரியாங்வல விஹாரை, அறநெறி பாடசாலையை மறக்கவில்லை. திங்கட்கிழமை (இன்று) ஓய்வு பெறுகின்றேன். அதற்கு முன்னர் கிராமத்துக்கு பொலிஸ் நிலையமொன்றை பெற்றுக்கொடுத்துள்ளேன்.

பொலிஸாருடன் நட்புறவுடன் பழகவேண்டும் என்று எனது கிராமத்தைச் சேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
குற்றம் புரிபவர்கள், மீண்டும் மீண்டும் குற்றங்களை இழைப்பதற்கு இடமளிக்காது நல்ல மனிதனாக்குவதே பொலிஸின் எண்ணக்கருவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

33ஆவது பொலிஸ் மா அதிபரான என்.கே. இலங்ககோன், ஓய்வு பெறுவதற்கு முன்னர் அளிக்கப்படுகின்ற மரியாதை அணிவகுப்பு வைபவம், கொழும்பு-03 பம்பலப்பிட்டி பொலிஸ் களப்படை தலைமையக விளையாட்டு மைதானத்தில் மாலை 3 மணிக்கு இடம்பெறும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X