2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

'ஈழக் கனவை தோல்வியடைய செய்வோம்'

George   / 2016 ஜூன் 07 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள்ளும் வெளியேயும் உள்ள ஈழம் என்ற கனவு மற்றும் விடுதலை புலிகளின் சித்தாந்தத்தை நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து இல்லாதொழிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணவிட்டால் வடக்கு இளைஞர்கள் மீண்டும் ஆயுதத்தை கையில் எடுக்கும் நிலை உருவாகலாம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

தெஹிவளை - கல்சிசை நகரமண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

27 வருடங்களாக வடக்கு மக்கள் முகாம்களில் இருந்தனர். நான் கேட்கின்றேன் உங்களால் அவ்வாறு இருக்க முடியுமா? அதனால் நாம் அனைவரும் எமது பிரச்சினை போலவே அவர்களது பிரச்சினைகளை உணர்ந்து கொள்ள வேண்டும்' என்று ஜனாதிபதி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .